ஓர் உண்மையான
சமூக மனிதன்
தொழிலாளிகள் பக்கமே நிற்பான்;
நானும்
தூய்மைப் பணியாளர்கள்
பக்கமே நிற்கிறேன்
சராசரி மனிதர்களால்
சாத்தியப்படாத
தூய்மைப் பணியை
நுரையீரலைப் பணயம்வைத்து
ஈடேற்றுகிற
ஈடற்ற தியாகிகள் அவர்கள்
அவர்கள் எதிர்பார்ப்பது
கருணையை அல்ல;
உரிமையை
முதலமைச்சர்
மு.க.ஸ்டாலின் அவர்களின்
அமைச்சரவை
ஆறு அம்சத் திட்டத்தால்
அவர்களின் வாழ்வுக்கு
வளம்சேர்க்கவே கருதுகிறது
தூய்மைப் பணியாளர்கள்
விரைவில் வேலைக்குத்
திரும்ப வேண்டும்;
கோரிக்கைகள்
காலப்போக்கில்
கனிந்தே தீரும்
இது
தொழிலாளிகள் உலகம்
அவர்கள் நலம்
சமுதாய நலம்
அனைவர்க்கும்
விடுதலைத் திருநாள்
வாழ்த்துக்கள்
