லக்ஷ்மிரமணன்/வயது

தாங்கள் வசித்த அதே பன்மாடிக்கட்டிடத்தில்
மூன்றாவது மாடியில் குடிவந்திருந்த ரமா ,ரகு
தம்பதியின் மகன் சுரேஷ் பொறியியல் படித்த
பின் தனியார் நிறுவனமொன்றில் பணிபுரிகிறான்
என்று கேள்விப்பட்டதும் முதல்மாடியில் இருந்த
வீணா, விவேக் தம்பதியினருக்கு
தங்கள் மகள் நந்தினிக்கு அவன் ஜாதகத்தை
கேட்டுவாங்கி பொருந்தினால் விவாகமுயற்சி
யில் இறங்கலாம் என்று தோன்றவே கிளம்பி
சென்றார்கள்.
“என் மகன் சுரேஷுக்கு முப்பது வயதாகிறது.
உங்க பெண் நந்தினிக்கு என்ன வயசு?”
ரமாவின் குரலில் விவரிக்கமுடியாத ஒருவித
அலட்சியமும் ஏளனமும் இருந்தமாதிரிவீணா
வுக்குத்தோன்றியது. அதை மறக்க முயன்ற
வளாய்” நந்தினிக்கு இருபத்தி ஏழுவயதுதான்ஆகிறது.
அதனால் வயசு ஒரு பிச்சினைன்னு
தோணலை”
” அப்படி யார் சொன்னாங்க. அதுதான் பிரச்சி
னைன்னு நான் சொல்லறேன்” என்ற ரமாவை
அதிர்ச்சியுடன் வீணா பார்த்தாள்
“மூணு வயசு வித்தியாசம் போதாதா மேடம்”?
” என் மூத்த மருமகளுக்கு இருபத்தினான்கு
வயசுதான் ஆகிறது. அவளைவிட இளைய
மருமகள் வயசில் பெரியவளாய் இருந்தால்
சரிப்படுமா?”
“இரண்டுக்கும் என்ன சம்பந்தம்?”
“சம்பந்தம் இருக்கோ இல்லையோ எனக்கும்
என் கணவருக்கும் அது பிடிக்காது”
தீர்மானமாக ரமா அப்படிப்பேசியதால் இனி
என்னசொன்னாலும் பயனில்லை என்பதை
உணர்ந்த வீணாவும் விவேக்கும் கிளம்பிவீடு
திரும்பினாலும் மனதில் புரியாத உளைச்சல்
இருக்கத்தான் செய்தது.
இரண்டு வாரங்களுக்குப்பிறகு எதிர்வீட்டுப்
பாட்டி பதட்டத்துடன் வந்து”வீணா உனக்கு
நியூஸ் தெரியுமா?மூணாவதுமாடியிலுள்ள
ரமா ஹார்ட் அட்டாக் வந்து ஆஸ்பத்திரியில்
அட்மிட் ஆகியிருக்காளாம்.”
“பாவமே என்னாச்சு?நன்றாகத்தானேஇருந்தா
“அதை ஏன் கேட்கிறே .அவ பிள்ளைசுரேஷ்
தன்னோடு வேலை பார்க்கிற இந்திக்கார
பெண்ணை ரகசியமாய் கல்யாணம் பண்ணிக்கிட்டானாம்
அவள் இவனைவிட அஞ்சுவயசு
பெரியவளாம்”
அதைக்கேட்டவீணாவுக்குஅதிர்ச்சியாக
இருந்தாலும் நல்லவேளை நந்தினி தப்பிச்சா
என்று ஆறுதலாகவும்,சந்தோஷமாகவும்
இருந்தது.