ப.மதியழகன்/எங்கே செல்கிறது என் தேசம்

சொல்புதிது இன்றைய(15.08.25) கவியரங்கில் வாசித்த கவிதை எண் : 1

கொண்டாட்டம் என்பது
ஒருநாளோடு நின்றுவிடுவதில்லை
கிழக்கு எப்போதும்
வேர்களைத் தேடியே
பயணிக்கிறது
சுதந்திரம் – என்பது
அரசியலமைப்பு சட்டத்தில்
இடம்பெற்றிருக்கும் வெறும்
வார்த்தை அல்ல
போராட்டம் என்பது
முகநூலில் ஆரம்பித்து
வலையொளியோடு முடிந்துவிடக்
கூடிய ஒன்றல்ல
போராளிகள் அனைவரும்
ஆயுதத்தை
ஆன்ம பலத்தால் வென்றார்கள்
தியாகம் என்பது
வாழ்வை விட்டெறிந்து
மரணத்துடன் மோதுவது
இந்தியாவின் விடுதலை வரலாறு
முப்புறமும் கண்ணீர் சூழ்ந்த
கடலாகவே இருக்கிறது
இன்னொரு காந்தி
சாத்தியமில்லாமல் இருக்கலாம்
இந்த இருபத்தியோராம் நூற்றாண்டில்
உரிமைக்காக குரல் எழுப்பும்
ஒவ்வொருவரும் காந்தி தான்!

One Comment on “ப.மதியழகன்/எங்கே செல்கிறது என் தேசம்”

Comments are closed.