
விருட்சம் நடத்திய 79ஆவது சுதந்திர தின கவியரங்கில் நான் வாசித்த இரண்டாவது கவிதை
விடியலிலேயே எழுந்துவிடுகிறேன்
தினமும் ஷேவ் செய்கிறேன்
மடிப்பு கலையாமல் உடை உடுத்துகிறேன்
அவசர அவசரமாக சாப்பிடுகிறேன்
கண்ணாடி முன்பு அதிகநேரம் நிற்கிறேன்
ஏதோவொரு பாடலை ஹம்மிங் செய்கிறேன்
விழித்துக்கொண்டே கனவு காண்கிறேன்
உறக்கமில்லாமல் புரண்டு படுக்கிறேன்
தனக்குத் தானே சிரித்துக் கொள்கிறேன்
புத்தகத்தின் நடுவே மயிலிறகு வளர்க்கிறேன்
அடிக்கடி மணி பார்க்கிறேன்
கந்தசஷ்டி கவசம் படிக்கிறேன்
நெற்றியில் விபூதி இடுகிறேன்
எனக்குள் பேசிக் கொள்கிறேன்
வேறொன்றுமில்லை
இனிப்பு எடுத்துக் கொள்ளுங்கள்
எனக்கு காதல் பிறந்திருக்கிறது!

One Comment on “ப.மதியழகன்/எனக்கு காதல் பிறந்திருக்கிறது”
Comments are closed.