15.08.25 - 79 ஆவது சுதந்திர தினத்தன்று விருட்சம் நிகழ்வில் வாசித்த 10 கவிதைகளில் 2nd கவிதை.
காத்துக்கிடந்த மனத்திற்கு
ஏதோவொன்று சொன்னது
என்னச் செய்யப்போகிறாய் நீயென்று
எனக்கும் தெரியவில்லை என்று
மனம் சொல்லி முடிக்கும்முன்
சிரிப்பலைகள் கேட்டன ஒவ்வொன்றாய்
காற்று நன்றாய் வீசியது
இலைகள் படபடத்தன
பார்க்குமிடமெல்லாம்
பூப் பூவாய்த் தெரிய
எங்கோ சென்ற மனம் திரும்பிற்று
எதிரில் புழுதித் தழுவல்
வாரி அடித்த குப்பைச் சிதறல்கள்
மனிதர்கள் ஓடி ஓடிப் பறந்தார்கள்
பறவைகள் பறக்கத் தெரியாமல்
கீழே விழ
புழுதியில் புரண்டோடின
மரங்கள் சாய்ந்து கிடந்தன
மலர்களைப் பற்றித் தெரியவில்லை
விண்ணை நோக்கிப் பார்த்தபோது
மனமும் புரியவில்லை.
One Comment on “அழகியசிங்கர்/விசித்திரம்”
Comments are closed.