அழகியசிங்கர்/பழஞ்சட்டை

                              

              விருட்சம் நடத்தும் 'கவிதை வாசிக்கலாம் வாங்க' கூட்டம்- (15/08/25)  நிகழ்வில்  வாசித்த   கவிதை - 1 

                                ஒருசமயம்
    நம்ப முடியாத பழஞ்சட்டை
    பார்வையில் பட
    மரப் பீரோவில்
    துணிகள் மடிப்பில்
    கவனிப்பாரற்றுப் பல மாதங்களாய்
    மங்கிய ஒளியுடன்
    இருந்த சட்டை
    உறவைப் புதுப்பித்துக்கொள்ள விரும்பியது
    பிரித்தவுடன்
    கையின் அளவு குறைந்திருந்தது
    அணிந்து பார்த்ததில்
    பொத்தான் பிதுங்கி
    வயிற்றை விகாரப் படுத்தியது
    வெளிறிப் போன நிறம்
    உடலுடன் பொருந்தாமல்
    சட்டையின் அவலத்துடன்
    தேகம் பருத்து வழிந்தது
    கல்யாணம் ஆனப் புதியதில்
    சட்டை பிரமிப்பை உண்டாக்கியது
    பார்த்தவர் கேட்கும்படி
    சட்டையின் மணத்துடன்
    மனைவியை அணைத்ததில்
    குழந்தையும் அந்நிறத்தில்
    பிறந்தாளென்று சொல்வாள்
    பார்த்தவரை கவர்ந்த சட்டைக்கு
    என்னாயிற்று?
    தூக்கி எறிந்த நாள் என்று?
    ஒருநாள் üபைக்ýகில்
    üவேண்டாம் இநதச் சட்டை
    சாயம் போயிற்றுý என்றாளே
    சாயம் சட்டைக்கா
    சட்டை அணிந்த உடலுக்கா
    பிறகு 
    சட்டை கவனிப்பாராற்றுப்
    பீரோவில் பதுங்கியது
    தினமும் பார்வை 
    அதனுடன் பழக்கப்படவில்லை
    பல சட்டைகளுடன்
    எடுப்பாரின்றி பழஞ்சட்டை ஆயிற்று
    இன்று கொடுத்துவிட நினைத்தால்
    யாரிடம் கொடுப்பது?
    பீரோவிலிருந்து எடுத்தாயிற்று
    உடனே மறந்தும் விட்டது
    அலுவலகத்திலிருந்தபோது தோன்றியது
    ஞாபகச் சின்னமாய் வைத்திருக்கலாமென்று
    என்றோ ஒருநாள்
    உணவருந்தும் வேளையில்
    சட்டையைப்பற்றி விசாரித்ததில்
    பாத்திரமாய் ஜ்வலிக்கிறது என்ற பதில்.

One Comment on “அழகியசிங்கர்/பழஞ்சட்டை”

Comments are closed.