மதுவந்தி/மழை

15.08.25 , 79 ஆவது சுதந்திர தினத்தன்று விருட்சம் நிகழ்வில் நான் வாசித்த 10 கவிதைகளில் முதல் கவிதை.

ஞாயிறு மதியமொன்றில்
புத்தகம் படித்திருந்தேன்.

எப்போதாவது தோணும்
கவிதையைப் போல
மழை வந்தது.
புத்தகம் மூடி
ஜன்னலுக்குப் போனேன்.

வானம் மழைக் கரம் நீட்டி
சாலையின் முதுகைத்
தடவிக் கொடுத்தது.

மழைச் சாட்டைக்குப்
பயந்து ஓடி ஒளிந்தன
வாகனங்கள்.

கூரையிருந்தும்
குடிசைக்குள்ளும் மழை.
நனைந்து நடுங்கிய மனிதர்கள்.

ஒழுகாத வீட்டுக்குள்ளிருந்து
நனையாமல் மொரமொரப்பாய்
வேடிக்கை பார்க்க
வெட்கமாயிருந்தது.

மழையில் மழையைத் தவிர
எல்லாமும் தெரிய

எப்போதேனும் முழுமையாய்
மழையை மட்டும்
ரசிக்க வேண்டும்
என ஏக்கம் இப்போ.

One Comment on “மதுவந்தி/மழை”

Comments are closed.