மதுவந்தி/அருகருகேயானாலும்

15.08.25 , 79 ஆவது சுதந்திர தினத்தன்று விருட்சம் நிகழ்வில் நான் வாசித்த 10 கவிதைகளில் 3ஆவது கவிதை .

கிளைகளின் உலகமும்
வேர்களின் உலகமும் வேறுவேறு

அருகருகேயானாலும்;
இரண்டும் சேர்ந்துதான் மரம், ஆனாலும்,

கிளைகளின் உலகம்
காற்றோடு பேசியபடி,
வான் வீசி கைநீட்டி,
மழையோடு உறவாடி,
வெயிலோடு மகிழ்ந்தபடி.

வேர்களின் உலகம்
பூமிக்கு கீழே
வளங்களை தேடியபடி
நீர் தொட்டு, மண் புரண்டு
ஆனந்தமாய்.

வேர்களின்றி கிளைகளும்
கிளைகளின்றி வேர்களும்
இயங்க முடியாதென்றாலும்

இரு வேறு உலகங்கள்
இரண்டுக்கும்.

அருகருகேயானாலும்
பயணம் வெவ்வேறு

திசை ஒன்றானாலும்
சேர்ந்தே போனாலும்
பயணம் வேறு வேறு ….

மதுவந்தி/மழை – விருட்சம் நாளிதழ்

One Comment on “மதுவந்தி/அருகருகேயானாலும்”

Comments are closed.