
பூட்டியிருந்தால்
பேர்த் தெறிய முயலாதே
குடைக் கம்பி தேடாதே…
கட்டிடம் கட்டவரும் கடப்பாரையை
ஆயுதமாக்காதே.
ரத்தத் துளியைப்
போர்க் கொடியின்
ஊடும் பாவும் ஆக்காதே.
புரட்டி எறியும் பெரும் வேலை
உனக்கில்லை,
உலகைத் திருத்தும் உத்தமச் செய்கை
உனக்கேனப்பா?
சுவரும் ஆயுதமும்
உயரமும் பள்ளமும்
சுயநலத்தின் அகலங்கள்
உன்னைத் திருத்த
உலகில் வந்தவர்கள்
பிறர் சுமையைத் தூக்க
வகாலத் வாங்கியவர்கள்
பொதுச் சேவை என்று
பலசரக்கு கொணர்ந்தவர்கள்
வந்தவழி சென்றுவிட்டார்.
சுமையும் ஏடுகளும் செய்து.
ராமபாண பூச்சியும்
காதுடன் உறவாடும் உபதேசப் பந்தலும்
காசுக்குத் தூண்டிலிடும்
கலாசாரக் கைகளும் தான் மிச்சம்.
நீரளவே ஆகுமாம் நீராம்பல், நீ தின்ற சோற்றை
அவன் செரிக்க முடியாது.
உன்சோகைக்கு மருந்து அவன் தின்றால்
நோய் இறங்காதுழைப்பும்
உயிர் ஏறாது….
வானத்தின் திண்ணை மீது
வாகாய் அமர்ந்து
வேர்வையும் வேதனையும்
விசிறாத எதிர்மறையில்
குனிந்து,
இரங்கி,
கோபுரச் செருக்கொலிக்க
வாழ்வுக்கு வழிகாட்டும்
வரையோட்டுச் சாத்திரம்
சொல்லநான் வரவில்லை
ஓமமும் சீரகமும்
ஒன்றாய் ஆக்கி,
அப்ரேக்கை கண்ணாடி ஆக்கி
சுயநலத்தைப் பொதுத் தொண்டாக்கும்
ஜாலக் கண்ணாடி வித்தை
காட்ட நான் பாடவில்லை
பழவேதப் படையை ஒட்டி
லோகாயத வேதப்படையின்
தமுக்காய் ஒலிக்க நான்
தரணியில் அதிரவில்லை
மனுக்கால வெள்ளம் போச்சு.
மார்க்ஸ் கால வெள்ளம் போகும்
பூமித்தாய் கருணை வெள்ளம் سا
எக்காலும் வடியாதோடும்
இயற்கையின் ஓயாத்தானம்
உயிர்களின் ஒழியா உழைப்பு
செயற்கையின் சிலுப்பலிடையே
மலையாக நிலைத்து நிற்கும்…
இதற்கிடையில்,
நாலு மூலைத்தாச்சி
நடுவாடும் சித்தம்
சென்றதற் கேக்கம்
வருவதற்கு வாழ்த்து
கண்முன்,
வேரைப் பிடுங்கி முன்னேற்றம் காணும்
விஞ்ஞான வித்தை!
நீ தின்ற சோற்றை
அவன் செரிக்க முடியாது
உன் சோகைக்கு மருந்து
அவனுண்டால் போகாது…
தண்ணீர்ச் சொட்டின் தயவால்
வெள்ளமும் கடலுமானால்
நிகழும் நிமிஷத்துள்
நிலைத்துள்ள அண்டத்தை,
தொடரும் வினாடியில்
துயிலும் சத்தியத்தை
வாழ்வை,
மூடிக்கிடக்கும் காலத்தொடரை,
காலாதீ தத்தை, வாழ்மெய்யை
நிராகரித்து,
ஊஞ்சல்போல் முன்னும் பின்னும்
ஆடிக்கிரீச்சிடுவானேன்?
பின்நோக்கி
சரித்திரம் வரலாறென்று
மண்வெட்டி குந்தத்தோடு
பிணக்குழி பறித்துப் பார்த்தால்
வாழ்வின் கொதி உலைக்குப்
பருப்பாமா?
பாபைரஸ் சுருளும்,
பனை ஓலைப் பழம் பழுப்பும்,
சென்ற பெருமையும்
வழக்கொழிந்த பண்பாடும்,
இன்றைய வாழ்வுக்கு
வழி வந்து காட்டுமா?
மண்வெட்டி வந்தால்
புழுதி எழும்.
தர்க்கப்பந்தலெழும்,
இன, மொழி, தேதிச் சுருக்கு
நிகழ் நிமிஷப் பரியின் கழுத்தில்
சூழ்ந்து கொண்டிறுகிக் கொல்லும்…
அன்றி
கிட்டத்தில் மினுக்கி ஆசை காட்டி
எட்டியதும் எட்டப்போகும்
வருங்கால வாழ்வின்
வரிசை, சீர் முழக்கிவந்தால் –
உழைப்பாளியின் கையில் காசிருக்கும்
எனில் வயிறு கொடியில் உலரும்.
பட்டினிச் சலிப்பின்
குறைதீர்க்கும் குளத்தில்
பெற்றோர்கள் குழந்தைகளுடன்
விழுந்து மிதந்த கதை
பத்திரிகை பேய்ப்பசிக்கு
பொறியாகிப் பெருமைதரும்,
வருங்காலப் பெருமக்கள்
வாழ்வுப் போராட்டத்தில்
புத்தம்புது வெற்றி வரும்,
எனில் புகை அடங்காது.
தன்னறிவுக்கும் மேல்
தனி அறிவுக் கப்பாலும்
தரணியையும்
தராதலங்களனைத்தினையும்
உடலாக்கிப் புகுந்து
விஞ்ஞானிகள் வியக்க
விளையாடும் சக்தியினை,
உதிரத்தில் ஒன்றியதாய்,
நீண்ட கதைகளோ,
கலாசார மரபோ, மமதையோ
புகட்டாத மெய்யுணர்வால்
மூவாயிரம் கல்தாண்டி
இங்கு வந்த பறவைச் சத்தம்.
பறந்து வரப் பாதை உண்டா?
கக்
பார்த்துத் தெளிவு பெற
படங்களுண்டா?
கும மர்
தவறைத் திருத்தப்
பகுத்தறிவுண்டா?…
விஞ்ஞான அறிவுக்
கம்
கெட்டாத உயிரணு,
டீக்குப் ப
பறக்கும் சாத்திரத்தை
படித்தறியாக் காட்டுவாத்து
சைபீரியாவை விட்டு
வேடந்தாங்கலில்
தண்ணீரில் மூழ்கிய
தலைமயிர் போல் விரிந்திருக்கும்
ஏரி நடு மரத்தில்,
கூடு கட்டி வீடு கண்டு,
முட்டை இட்டுக் குஞ்சு கண்டு
உயிரின் இயக்கத்தை
விண்டு வைக்கும் காவியத்தைக்
கண்டபின்னும் உன் வழியைக் காணாயோ?
பாடம் கேட்காமல்
பாதை காட்டாமல்,
குஞ்சுகளும் தாமாய்
‘சைபீரியா செல்லும்
இயல்புணர்வைக் கண்டபின்னும்
ஒளியைக் காணாயோ?
பூட்டை மறந்து விடு.
உனைக் கொணர்ந்த
உயிரின் பெருமியக்கில்
ஒளிந்தசையும்
உள்விசையை,
சிந்தனையே அறியாத சிவந்தரத்தம்
உள்ளுக்குள் இருந்து
கணத்திற்கு கணம்
உசுப்பாமல் வழிகாட்டும்
உணர்வாய் உணர்ந்து விட்டால்
முன்னும் இல்லை,
பின்னும் இல்லை.
தொடர் சங்கிலி
முழுதும் இன்பம்
முற்றிலும் உணர்வு…
அன்றொரு நாள்
வேடந்தாங்கலில்
அந்தி விழும் நேரம்
கடலலை போல் நீர்ப்பரப்பு
நாற்கரையும் கவிந்தமரம்
நடுவில் மரத்தலைகள்
எண் திசையும் சிரிப்பது போல்
சிறகடிக்கும் சத்தம்
தன்னினத்தைப் பேணும் உணர்வில்
நெறியோ நீதியோ,
நீண்ட கதைகளோ,
கலாசார மரபோ, மமதையோ
புகட்டாத மெய்யுணர்வால்
மூவாயிரம் கல்தாண்டி
இங்கு வந்த பறவைச் சத்தம்.
பறந்து வரப் பாதை உண்டா?
பார்த்துத் தெளிவு பெற
படங்களுண்டா?
தவறைத் திருத்தப்
பகுத்தறிவுண்டா?…
விஞ்ஞான அறிவுக்
கெட்டாத உயிரணு,
பறக்கும் சாத்திரத்தை
படித்தறியாக் காட்டுவாத்து
சைபீரியாவை விட்டு
வேடந்தாங்கலில்
தண்ணீரில் மூழ்கிய
தலைமயிர் போல் விரிந்திருக்கும்
ஏரி நடு மரத்தில்,
கூடு கட்டி வீடு கண்டு,
முட்டை இட்டுக் குஞ்சு கண்டு
உயிரின் இயக்கத்தை
விண்டு வைக்கும் காவியத்தைக்
கண்டபின்னும் உன் வழியைக் காணாயோ?
பாடம் கேட்காமல்
பாதை காட்டாமல்,
குஞ்சுகளும் தாமாய்
‘சைபீரியா செல்லும்
இயல்புணர்வைக் கண்டபின்னும்
ஒளியைக் காணாயோ?
பூட்டை மறந்து விடு.
உனைக் கொணர்ந்த
உயிரின் பெருமியக்கில்
ஒளிந்தசையும்
உள்விசையை,
சிந்தனையே அறியாத சிவந்தரத்தம்
உடலென்னும் ஒன்றைச் செய்யும்
விந்தை விஞ்ஞானத்தை,
உணர்ந்து வணங்கி
காட்டுவாத்தாகி
சிறகை விரி
வாழ்வும் வேடந்தாங்கலாகும்.

அற்புதம்! அருமை!
அற்புதம்!