அழகியசிங்கர்/கூட்டத்தை நான் நடத்தவில்லை அசோகமித்திரன் நடத்தி விட்டார்

எல்லோருக்கும் வணக்கம்.

24.08.2025 ஞாயிற்றுக்கிழமை இலக்கியக்கூட்டமொன்று எந்தவித ஆடம்பரம் இல்லாமல் பபாசி தலைவர் கவிதா சொக்கலிங்கம் தலைமையில் நடந்தது. அசோகமித்திரன் புதல்வர்கள் ரவியும், ராமகிருஷ்ணனும் கலந்துகொண்டு விழாவைச் சிறப்பித்தனர். அசோகமித்திரனை ஓவியமாக வரைந்த ஓவியர் விஸ்வம் கலந்து கொண்டார். அன்று அசோகமித்திரன் நினைவாகப் பரிசுப் பெற்றவர்கள் கலந்து கொண்டு சிறப்பு செய்தார்கள். 5.30 மணிக்கு ஆரம்பித்த கூட்டம் இரவு 8 மணிக்கு முடிவடைந்தது.
எதிர்பாராத விதமாக வியாழக்கிழமை நடக்க வேண்டிய கூட்டம் ஞாயிற்றுக் கிழமை மாறியது ஆச்சரியம். இதனால் ஐதராபாத்தில் இருந்த அவர் புதல்வர் ராமகிருஷ்ணன் கலந்து கொள்ள முடிந்தது.
அவர் புதல்வர்கள் பேசும் போது ஒன்றைக் கவனித்தேன். இருவரும் அசோகமித்திரன் மாதிரி பேசினார்கள்.

இக்கூட்டம் அண்ணா நூலகத்தில் இரண்டாவது தளத்தில் நடந்தது. கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடக்க வாய்ப்பே இல்லை ஆனால் மாறி வந்தது தற்செயலான விஷயம்.