
😟😟
எவரும் எதையும் அறியாமல்;
யாதும் சுவடு படாமல்;
மந்தணமாய் ஒரு காரியம் செய்ய மனம் முற்பட
கரங்கள் செய்ய
என் கண் பார்த்ததில்
நான் ஆயாசம் அடைந்தேன்.
பிரிதொருநாள்
மனமே அறியாமல்
பொங்கும் புத்தரிசி
வாசத்தில் மயங்கி
படையல் போடுகையில் கரம் தயங்கியது
முதியவள் ஒருத்தி எவரும் அறியாமல்
என்னை பேர் சொல்லி அழைக்க
செவியில் ஏறாதது போல்
நான்
கண்டும் காணது போல் இருக்க;
மனத்தில் மட்டும்
நெருஞ்சி முள்ளாய் குத்திட்டு நிற்க:
எவராலும் ஐம்புலனும்
அறியாமல்
எதுவும் செய்ய இயலுமா?
எவரும் அறியாவிடினும்
என் மனம் அறிகிறதே!
அதை எப்படி கொல்வது?
