
குழந்தையாக இருக்கையில்
குழந்தையாக இருக்கிறாள்
கன்னியென்றானால்
வேறொன்றாகி நிற்கிறாள்
கையில்
குழந்தையுடன் செல்கையில்
முகமே வேறு
சிரிப்பே வேறு
இருசக்கர வாகனத்தில் செல்கையில் சாமி
பெற்ற குழந்தை கார் ஒட்டிச் செல்ல
முன்னிருக்கையில்
அமர்ந்து
ஓரக்கண்ணால் பார்த்து
சிரித்துக் கடக்கிறாள்
நானும் பதிலுக்குச்
சிரித்துக் கொண்டேன்
மருவூர் அரசியின்
சிரிப்பு
மூகாம்பிகைத் தாயாகத்
தெரிகிறாள்
