ஆசிரியர் பக்கம்/அழகியசிங்கர்

2.12.2021 –  வியாழன்

ஒரு நொடிக் கேள்வி ஒரு நொடிப் பதில் – 33


மோகினி : நேற்று உங்கள் பிறந்த தினம் போலிருக்கு

அழகியசிங்கர் : ஆமாம்.

ஜெகன் : பிறந்த தின வாழ்த்துகள்.

மோகினி : நானும் வாழ்த்துகிறேன்

அழகியசிங்கர் :  நன்றி.  பலரும் முகநூலில் வாழ்த்துத் தெரிவித்திருந்தார்கள்.  புவனத்திலும் தெரிவித்திருந்தார்கள்.

மோகினி :  நல்ல விஷயம். 

அழகியசிங்கர் : என் பிறந்த தினம் என்று தெரியாமல் ஒரு காலத்திலிருந்திருக்கிறேன்.

ஜெகன் :  எப்படிப் போய்க் கொண்டிருக்கிறது உங்கள் டெய்லி 

மோகினி :  சமாளிக்க முடிகிறதா?

ஜெகன் :  மழை பாதிப்பு எப்படி மாம்பலத்திலிருந்தது.

அழகியசிங்கர் : முதலில் என் டெய்லியை சமாளிக்க முடிகிறது.  நல்ல நல்ல கவிதைகளைப் பதிவிடுகிறேன்.  இன்னும் அதிகமான விஷயங்களைக் கொண்டு வரவேண்டுமென்று நினைக்கிறேன்

மோகினி : உடனே ஒரு கதை அல்லது ஒரு கவிதை என்றால் உங்களிடம்தான் வரவேண்டும்.

ஜெகன் : தரமான படைப்புகளைத்தான் தேர்ந்தெடுக்கிறீர்களா?

மோகினி : அப்படி முடியாது.

அழகியசிங்கர் :  அப்படியெல்லாம் இல்லை.  படிக்க ஒரு ஒழுங்கான படைப்புகளைத் தேர்ந்தெடுக்கிறேன். இன்னும் என்னன்ன சிறப்பு செய்ய முடியுமோ செய்கிறேன்.
மோகினி :  ஆசிரியர் பக்கம் தொடர்ந்து எழுத வேண்டும்.

ஜெகன் :  இதை எழுத ஆரம்பிக்கும்போது மணி பத்துக்குமேல் ஆகிவிடுகிறது.

அழகியசிங்கர் :  பத்து மணிக்கு மேல் ஆகிவிடுகிறது.  ஒரு அலுப்பு வந்து விடுகிறது.  பதிவு செய்தால் போதுமென்று விட்டு விடுகிறேன். இந்த டெய்லி  எனக்கு ஒரு சவால்.

மோகினி :  இன்னும் பலர் இதைக் கண்டுகொள்வதில்லை

அழகியசிங்கர் : ஆமாம்.  ஆனால் 300 பேர்களுக்கு மேல் இதைப் பார்க்கிறார்கள்.  கொஞ்சம் கொஞ்சமாக எல்லார் மனதையும் இது கவரும்.

ஜெகன் : கும்பகோணத்தில் நகுலன் நூற்றாண்டு சாகித்திய அக்காதெமி ஏற்பாடு செய்ததே நீங்கள் போகலையா?

மோகினி : நிற்காமல் மழை பெய்து கொண்டிருந்தது.

அழகியசிங்கர் : போகவில்லை.  மழை.   நான் ‘நகுலன் கட்டுரைகள்’ என்ற தலைப்பில் பேசுவதாக இருந்தது. அதை ஒருமுறை தள்ளி வைத்தார்கள்.  இன்னொரு முறை தள்ளி வைப்பார்கள் என்று நினைத்தேன்.  ஏமாற்றம்.  ஆனால் நகுலன் கட்டுரைகள் புத்தகம் படித்து ஒரு பெரிய கட்டுரை எழுதி விட்டேன்.  அது எனக்குத் திருப்தி. 

மோகினி : நாம் நாளை சந்திப்போம்.

ஜெகன் :: சந்திப்போம்.

அழகியசிங்கர்.  நல்ல இரவாக கனியட்டும்.  

One Comment on “ஆசிரியர் பக்கம்/அழகியசிங்கர்”

Comments are closed.