யாருக்கு வரும் துணிச்சல்

நேற்று இரவு பாண்டிச்சேரியில் இருந்து விழுப்புரம் வரும் வழியில் அரசு பேருந்தில் இந்த தம்பி பயணித்து வந்துள்ளார் எதிர்பாராத விதமாக இந்த தம்பிக்கு மாரடைப்பு வந்து மயங்கி நிலையில் மூச்சு இல்லாமல் படுத்துவிட்டார். அதை பார்த்த நமது கீழ்பெரும்பாக்கம் பகுதியை சேர்ந்த மணிகண்டன் என்கிற E.S மணி மற்றும் தினேஷ் என்கிற paal இருவரும் எதையும் சிந்திக்காமல் நமக்கு ஆபத்து வரும் என்பதையும் உணராமல் இவரை பொறுப்புடன் மணக்குள விநாயகர் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சிகிச்சை அளித்து உயிர் பெற செய்துள்ளனர். இந்த மனிதாபிமானம் எத்தனை பேருக்கு அதில் இருந்தது என்று தெரியவில்லை யாரும் இறங்கவில்லை அவருக்கு யார் உதவி செய்யவில்லை இவர்கள் இரண்டு பேரும் இறங்கி சென்று அவரை மருத்துவமனையில் சேர்த்து முதல் உதவி செய்துள்ளனர் அதன் பிறகு அவரது mobile எடுத்து அவரது வீட்டிற்கு தகவல் கொடுத்துள்ளனர். பேருந்தில் இருந்து இறங்கும்போது ஆட்டோக்காரர் கூட உதவிக்கு வரவில்லை அதன் பிறகு ஒருவரை வரவழைத்து அழைத்து சென்று இருக்கிறார்கள்.
இவர்கள் இருவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்

உங்களது துணிவும் மனிதாபிமானத்திற்கும் எனது அன்பு கலந்த வாழ்த்துக்கள்👏😍