நாகேந்திர பாரதி/கொலு பொம்மைகள்

அழகியசிங்கரின் சென்ற மாத சொல் புதிது நிகழ்வில் வாசித்த பத்து கவிதைகள் (15.08.2025)


நிற்கும் பொம்மைகளிடம்
கதைகள் இருக்கின்றன

படுக்க வைக்கப் படும்போது
பகிர்ந்து கொள்ளப்படும்

மண்ணாக இருந்த காலத்தின்
மகிழ்ச்சிக் கதைகள்

கேட்கும் அம்மாவுக்கும்
கண்கள் கசியும்

படுக்கும் நேரத்தில்
தலையணை நனைய வைக்கும்

மணமான காலத்திற்கு
முன்பிருந்த நிலை நினைந்து

——————