அழகியசிங்கர் கவிதை

இன்று (19.09.2025) விருட்சம் ஏற்பாடு செய்த கவிதை வாசிக்கலாம் கூட்டத்தில் வாசித்த முதல் கவிதை

பொதுவாக
கவி அரங்கத்தில்
யாரும்
கவிதை வாசிக்க
வருவதில்லை

அதனால் ஒன்றும் கிடைக்கப் போவதில்லை

அவர் பெரிய கவிஞர் என்று யாரும் சொல்லப்
போவதில்லை

அவர் கவிதை வாசித்தால்
யாரும் கேட்கப் போவதில்லை

அவர் செலவு செய்து
கொண்டு வந்த புத்தகங்கள் ஒன்றும் விற்கப் போவதில்லை

அதனால் கவி அரங்கத்தில் கவிதை வாசிக்க வரப் போவதில்லை

அழகியசிங்கர்
19.09.2025
3.23 மாலை

One Comment on “அழகியசிங்கர் கவிதை”

Comments are closed.