தங்கேஸ்/நகரும் காலம்நின்று விடுகிறது

19.09. 2025 அன்று விருட்சம் கவியரங்கில் வாசிக்கப்பட்ட கவிதை : 06

ஒரு மின்னல் கண்ணுக்கு எதிரில் தோன்றினால்
போன மழை ஞாபகம் வந்து விடுகிறது

போன மழை ஞாபகம் வந்தால்
கூடவே நீ வந்து விடுகிறாய்

மழைக்காலத்து நீ வந்தால்
நகரும் காலம்  நின்று விடுகிறது

நகரும் காலம் நின்று விட்டால்
ஊழிக்காலம் ஆரம்பித்து விடுகிறது

தங்கேஸ்/ஆறு – விருட்சம் நாளிதழ்

One Comment on “தங்கேஸ்/நகரும் காலம்நின்று விடுகிறது”

Comments are closed.