எஸ்ஸார்சி/கைபர் வி(ஷ)யம்

19/9/25
இணையக் கால கவியரங்கம்
எஸ்ஸார்சி வாசித்த கவிதை 9

கான்வென்ட்டுக்கல்விக்காய்
கரன்சி பெற்று
சௌராட்டிப் பார்ப்பனர்கள்
பாவிட்ட புடவைக் கட்டி நிற்கும்
அவளுக்கும்
யூ எஸ் வெஸ்டின் வேலை பலத்தால்
டீவீஎஸ் சுசுகியொடு
ரேமண்சில் பதுங்கி நிற்கும்
அவனுக்கும்
துபாயுக்கு ஆள் ஏற்றி நோட்டுப் பெறும்
தாடிக்கார பாயின் திருமண மண்டபத்தில்
நாள் நட்சத்திரம் பார்த்துத்தான் அது
பர்மா பஜாரின்
சொரியங்கல் கொரியன் ஜீன்ஸ் சகிதமாய்
ஃப்ரெஞ்ச் அயிட்டம்
உள்வாங்கி சேட்டுக்கடன்
பெற்று ஓடும்
பேருந்தில் பயணம் செய்து
வாழ்த்துப் சொன்னார்
பச்சைத்தமிழர்
கைபர் கணவாயை கருங்கல் வைத்து
எம்மவர் அடைத்துவிட
படையாய்ப் புறப்பட்ட போது
தடுத்ததெவர் ?
ஆய்ந்தே முடிப்போம் தமிழ்மீது ஆணை.

எஸ்ஸார்சி /மட விவகாரம் – விருட்சம் நாளிதழ்

One Comment on “எஸ்ஸார்சி/கைபர் வி(ஷ)யம்”

Comments are closed.