வளவ. துரையன்/அப்பாவின் நாற்காலி

19-9-25-விருட்சம் கவியரங்கில் வளவ. துரையன் வாசித்த கவிதை 8

அப்பா ஆசையாய்
வீட்டின் தேக்குமரம்
வெட்டிச் செய்தது
அருணாசல ஆசாரிக்கு
அப்போதே 1000 ரூபாய் கூலி
அதில் உட்கார்ந்துதான்
காலையில் காப்பி குடிப்பதும்
செய்தித்தாள் மேய்வதும்
வயலுக்குப் போய் வந்தபின்
வழக்கமான ராமாயணமும்
அதிலேதான்
வேறு யாரும் உட்கார்ந்தால்
தன் சாம்ராஜ்யமே
அஸ்தமித்ததாய் அலறுவார்
அதன்மேல் துண்டிருந்தால்
அவர் உள்ளே இருப்பதாய்ப் பொருள்
எப்போது அவர் மறைவாரென்று காத்துக் கிடந்தது
இப்போது அந்த இடத்தை
அடைத்துக் கொண்டிருக்கும் சோபா

2 Comments on “வளவ. துரையன்/அப்பாவின் நாற்காலி”

  1. என் தந்தை க்கும் பொருந்தும்
    இடபற்றாகுறையால் அவர் உபயோகித்த நாற்காலி அகற்ற ப் பட்டது
    அருமை

Comments are closed.