
விருட்சம் 19.09.25 அன்று நடைபெற்ற கவியரங்கில் வாசித்த ஐந்தாவது கவிதை
கவிதை எண்: 5
விலங்குகள்
உயிரியல் பூங்காக்களில்
பறவைகள்
சரணாலயங்களில்
மனிதர்கள்
கான்கிரீட் காடுகளில்
இடம்பெயர்ந்து செல்ல
செவ்வாய் இருக்கிறதுதான்
ஆனால் மனிதனோ
செய்நன்றி மறந்தவன்
வேசி என்பவள்
உடலை விற்பவள் மட்டுமல்ல
ஒவ்வொரு அடியிலும்
உயிர்பெறுவது தான்
சிலை!

4kbr0f