
19.09. 2025 அன்று விடும் இணைய வழி கவியரங்கில் வாசிக்கப்பட்ட கவிதை : 07
அணிலோடு மூன்றாம் கிளைக்கு
தாவி விட்டிருந்தது மனது
தாவலில்கொஞ்சம்
மஞ்சள் அரளிப் பூக்கள் உதிர்ந்தன
ஒன்றை எடுத்து முகர்ந்து பார்த்தேன்
தேன் சிட்டுகளின் கூரிய
அலகுகள் உள்ளிருந்து நீண்டு
உதடுகளை நிமிண்டின
சிறகுகளை ஏந்திச் செல்லும் காற்றே
மனம் என்பது உனது வாகனமா?
ஒளியில் ஏற்றி பால்வீதியில் பறக்க விடு
அந்த சாத்தானின்
அம்சத்தை என்று
கூச்சலிட்டுப் போனது அது

One Comment on “தங்கேஸ்/மூன்றாம் கிளை”
Comments are closed.