
சில சிறந்த மனிதர்களை மற்றும் சாதனையாளர்களை சந்திக்கும் பொழுது மனதில் ஒரு மகிழ்ச்சி மற்றும் ஒரு பெருமிதம் எற்படும்.
அப்படி ஒரு மகிழ்ச்சியும், பெருமிதமும் நேற்று “நவீன விருட்சம் ” என்ற சிற்றிதழனின் ஆசிரியர், சிறந்த இலக்கியவாதி, எழுத்தாளர் மற்றும் கவிஞர் திரு. அழகிய சிங்கர் அவர்களைச் சந்தித்த பொழுது எனக்கு எற்பட்டது
30 ஆண்டுகளுக்கு மேலாக ” நவீன விருட்சம் ” என்ற சிற்றிதழை தொடர்ந்து நடத்தி வருகிறார் .
தமிழில் இன்றைய சிறந்த கவிஞர்களான , குட்டி ரேவதி, பெருந்தேவி போன்றவர்கள் எல்லாம் இவரது சிற்றிதழில்தான் தங்கள் பயணத்தை தொடங்கினார்கள்.
க.நா.சு இவரின் ஆதர்சம். நகுலன் இவரின் உற்ற தோழன்
நல்ல கவிதைகள் யார் எழுதினாலும் மனம் திறந்து பாராட்டுபவர் அதோடு மட்டுமின்றி தனது இதழிலிலும் வெளியிடச் செய்து அவர்களை கெளரவிப்பவர்
மேலும் கதையாசிரியர்கள் மற்றும் கவிஞர்களை போற்றும் வண்ணம் “கதை ஞர்களை போற்றுவோம்”
” கவிதை வாசிக்கலாம் வாங்க” என்ற வித்தியாசமான நிகழ்ச்சிகளை தொடர்ந்து Zoom மூலம் நடத்தி வருகிறார்
எனது கவிதைகள் பலவும் இவரது இதழில் வெளியாகியுள்ளன.
எப்பொழுதும் எனது கவிதைகளை பாராட்டி ஊக்கப்படுத்துவார்
நேற்று அவரை சென்னையில் அவரது இல்லத்தில் சந்தித்து உரையாடி எனது முதல் கவிதைத் தொகுப்பான “அம்மாவின் பூனையை ” வழங்கி அவரிடம் ஆசிப் பெற்றுக் கொண்டது ஒரு இனிய தருணம்
“தொடர்ந்து எழுதிக் கொண்டே இருங்கள். இன்னும் பல தொகுப்புகள் கொண்டு வாருங்கள்” என்று ஆசி வழங்கி அன்போடு வழியனுப்பி வைத்தார்

v8no61