எஸ்ஸார்சி/பசிக்கடவுள் 10

இணையக் கால கவியரங்கம்
எஸ்ஸார்சி வாசித்த கவிதை

பழமலையப்பனுக்கு
பத்துக்குடம் நீர் எடுத்து
கட்டைச்சந்தனமும்
தானரைத்து
பணியிடுக்கில்
சோற்றுத் தலைச்சுமையாய்
சன்னிதிகள் வலம் வந்தே
நாளும் பட்டை ரெண்டு
மாதமோ எழுபத்தைந்து
பெற்று மட்டும்
தாயுடன் தங்கையை அவள் தாய் வீடு

கொண்டுவந்த இரு சிசுவை எத்தனை நாளைக்குக்
குறைவயிறாய் துயில வைப்பான்
இப்போ மூவருமாய் முடிவெடுத்து
பஜ்ஜியும் வடை வகையும்
சாலையோர‌ ஜாம் ஜாம் வியாபாரம் பழமலைக்குச்
சினமெனினும் பசிக்கடவுள் பலவான் நிதர்சனமாய்

எஸ்ஸார்சி/கைபர் வி(ஷ)யம் – விருட்சம் நாளிதழ்