இரண்டு முட்டாள்கள் -பீகார்நாட்டுப்புறக்கதை

தமிழில்
அதங்கோடு அனிஷ்குமார்

ஒரு காலத்தில் ஒரு ராஜா இருந்தார்.அவர் தான் தான் உலகத்தில் அதிபுத்திசாலி என்று நினைத்துக்கொண்டிருந்தார்.ஒருநாள் அவர் தன் திவானை அருகில்அழைத்து
இங்கிருக்கும் சாதாரண மனிதர்களுடன் பேசிப்பேசி அலுத்துவிட்டது என்றார்.மேலும், தனக்கு இணையான அதிபுத்திசாலியுடன் உரையாட விரும்புவதாகவும் தெரிவித்தார்.-

ஒரு பள்ளிமாணவனிடம் கூட உரையாட ராஜாவால் முடியாது என்பதை அறிந்திருந்த திவான் அவர் கேட்டபடி ஒருவரை அழைத்து வருவதாகச் சொன்னார்.சில நாட்கள் கழித்து வாய்பேச இயலாத மாடுமேய்ப்பவன் ஒருவனை அழைத்து வந்து, இவர் ஒரு பெரிய ஞானி என்று சொன்னார்.


“அதையும் கண்டு பிடித்து விடுவோம்”எனச் சொன்ன ராஜா?, “அவனுக்கு பேசமுடியாது என்பதால் நாம் சைகை மூலம் உரையாடலாம்”எனக் கூறிக்கொண்டே தனது ஒரு விரலை உயர்த்தினார்.பதிலுக்கு அவன் இரண்டு விரல்களை உயர்த்தினான்.

“நல்லது நல்லது”எனச் சொன்ன ராஜா தனது மூன்று விரல்களை உயர்த்தினார்.தனக்கு இதில் சம்மதமில்லை எனும் தோரணையில் ஆக்ரோசமாக சைகை செய்தபடி வெளியேறினான்.

அவன் வெளியேறிய பின் ராஜா,”அவன் தான் உண்மையில் அதிபுத்திசாலி”என்றார்

.”நான் ஒரு விரலையுயர்த்தி நான் தான் ஈடுஇணையற்ற வலிமையானவன்” எனச் சொன்னபோது அவன் தன் இரு விரல்களை உயர்த்தி கடவுளே சர்வவல்லமை வாய்ந்தவர் என ஞாபகப் படுத்தினார்.கடவுளையும் என்னையும் தவிர வேறுயாரும் இருக்கிறார்களா?என மூன்று விரல்களை உயர்த்திக் கேட்டபோது,அவன் இல்லை என சொல்லாமல் சொல்லி வெளியேறி விட்டான்”என்றார்.

எல்லோரும் அவனின் ஞானத்தை எண்ணி ஆச்சரியப்பட்டனர்.ராஜா அவனுக்கு பொன்னும் பொருளும் கொடுத்து பெருமைப்படுத்தினார்.அதைக்கொண்டு அவன் தன் மீதமுள்ள காலத்தை மிகவும் வசதியாக வாழ்ந்தான்

.ஆனால் ,ராஜா ஏன்இப்படி எல்லாவற்றையும் வழங்கினார் என்பது மட்டும் அவனுக்கு ஒருபோதும் விளங்கவில்லை.

அவன் ராஜாவுடன் நடந்த சந்திப்பை அடிக்கடி நினைத்துக் கொண்டான்.ராஜா ஒருவிரலை உயர்த்திய போது இவன் ராஜா தன்னுடைய ஒரு ஆட்டைக் கேட்கிறார் என நினைத்தார்.ராஜவிசுவாசியான அவன் இரண்டு தருவதாகச் சொன்னான்.ஆனால் பிறகு மூன்று ஆடுகளைக் கேட்டார் என நினைத்து, தன்னுடைய எல்லா ஆடுகளையும் யார் தான் கொடுக்க முடியும்?அவன் முடியாதென மறுத்தபடி அரண்மனையை விட்டு வெளியேறினான்.

One Comment on “இரண்டு முட்டாள்கள் -பீகார்நாட்டுப்புறக்கதை”

  1. ஹா ஹா. ராஜா மாத்திரம் இல்லை. நாம் கூடத்தான். நாம் விரும்பும் சொல்லை எதிர்பார்த்து, பிறர் அசைவை, குறிப்பை பொருள் கொள்கிறோம்.

Comments are closed.