துளி 226/அழகியசிங்கர்

நேற்று (04.11.2025) விருட்சம் நடத்திய கூட்டத்தை, 5 மணியிலிருந்து ஆரம்பித்திருக்கலாமென்று நினைக்கிறேன். 5.30 மணிக்கு ஆரம்பித்ததால் கடைசியாகப் பேச வேண்டிய முனைவர் வ.வே.சுக்கு அவகாசம் இல்லாமல் போய் விட்டது. இரா முருகன் கவிதைகளைப் பற்றி அவர் பேச வேண்டியிருந்தது. அவரால் நினைத்த மாதிரி பேச முடியவில்லை. அண்ணா நூலகத்தில் எட்டு மணி வரை பேச அனுமதிப்பார்கள். பிறகு நூலகத்தைப் பூட்டி விடுவார்கள். நேற்று பேச்சு முடிக்கும்போது 8.15 ஆகிவிட்டது.
அவசரம் அவசரமாகப் பேசும்படி ஆகிவிட்டது. அடுத்த முறை கூட்டம் போடும்போது இன்னும் கவனமாக இருக்க வேண்டும்.