ஆர். வத்ஸலா/பெய்யென பெய்யும் மழை – 1

4/11/25 அன்று அழகியசிங்கரின் இணையவழி கவியரங்கத்தில் நான் வாசித்த கவிதைகள்:

தேவைக்கேற்ப சேமிக்கப்பட்டு விட்டது
தண்ணீரென தெரிந்துக் கொண்ட பின்

உள் வெளிச்சம்
அளவாயிருக்கிறதென
நிபுணர்
ஒப்புதல் தந்த பின்

கூரை சல்லடைகளை
ஆராய்ந்தவர்
கட்டை விரலால் ‘லைக்’ காட்டிய பின்

அவள் அங்க லட்சணங்கள்
எத்தனை இருக்கைளை நிரப்புமென
அனுமானித்திருந்த
தயாரிப்பாளர்
அரைகுறை ஆடை
ஈரத்தில் மெல் கண்ணாடியாகு மென
நிச்சயித்துக் கொண்ட பின்
தலையசைக்க

இயக்குனர் குரலுயர்த்திப்
பெய்யென பெய்யும் மழை
6/2/2021
“வத்ஸலாவின் தேர்ந்தெடுத்த கவிதைகள்” (தொகுப்பு)

வளவ.துரையன்/இடமில்லை – விருட்சம் நாளிதழ்

எஸ்ஸார்சி/ஆத்ம ஞானம் – விருட்சம் நாளிதழ்

ரேவதி ராமச்சந்திரன்/காணவில்லை – விருட்சம் நாளிதழ்

தங்கேஸ்/மனது – விருட்சம் நாளிதழ்

One Comment on “ஆர். வத்ஸலா/பெய்யென பெய்யும் மழை – 1”

Comments are closed.