விஜயலக்ஷ்மி கண்ணன்/துணிவே துணை

நான் 14 .11.2025 இணைய கவியரங்கத்தில் வாசித்த முதல் கவிதை

துணிந்து நில் மலை போல்,
துணிந்து செல் வெற்றி வீரனாக.
உன் பாதையில் நீயே நிஜம்
உடன் வரும் துணிவே துணை
இமயத்தின் சிகரம் தொட்டவரும் துணிந்தார்
விண்வெளியில் சென்று வந்தவரும்
அப்படியே.
நாம் துணிந்து செயல்படும் போது
நம்மை பிடித்து கீழே இறக்கவும்
நம் துணிச்சலை
பொசுக்கிடவும் முனைவார்கள்.
நம் நம்பிக்கையை
தளர விடாமல்
படிகளை தாண்டி மேலும் ஏறி,
சோதனைகளை வென்று
சாதனைகள் புரிந்திடுவோம்.