அழகியசிங்கர் /குழந்தைகளும் பொம்மைகளும்

                              
         குழந்தைகள்
    பொம்மைகளை வைத்து
    விளையாடுகின்றன
    பொம்மைகள்
    குழந்தைகளுடன்
    கொஞ்சுகின்றன
    அவற்றின்
    அழகு அர்த்தமுள்ளதாய்
    மாறுகின்றன
    இடையில்
    குழந்தைகளின் அதீத
    அன்பால்
    உடைகின்றன பொம்மைகள்
    குழந்தைகளுக்கு
    வேறு பொம்மைகள்
    கிடைக்கின்றன
    உடைந்த பொம்மைகளுக்குக்
    கிட்டுவதில்லை குழந்தைகள்