சசிகலா விஸ்வநாதன்/ உறவு

(உறவு
(1) மிகுந்த மனச்சோர்வில் இருந்த மஹிமா மெதுவாக தன் காரை ஓட்டிவந்தாள்.
(2) எவ்வளவு நாட்கள் வீட்டில் தனியே கிடந்து உழல முடியும்?
(3) உற்றோரையும் பெற்றோரையும் எதிர்த்து செய்த மண வாழ்வு, எதிர்பாரா விபத்தில் திலீபனின் இறந்து போக; தனிமைத் தீவில் அகப்பட்டுக் கொண்டாள்.
(4) திரும்பி அலுவலகம் வந்து போனால் ஒரு மாறுவதலாக இருக்கும், என்று நினைத்து வந்தவளுக்குச் சொல்லப்பட்ட முறைமை சொற்களும், அனுதாப வார்த்தைகளும், கோரா அறிவுரைகளும், அவளுடைய துயரத்தையும், தவிப்பையும், இன்னும் அதிகமாக்கின.
(5) ஓரிரு நண்பர்கள் மறுமணம் பற்றி பேசியது; அவள் மனத்தை இன்னும் ரணமாக்கியது.
(6) திலீபன் இறந்து இரண்டு மாதம்கூட ஆகாத நிலையில் இவர்களால் எப்படி மறு மணத்தைப் பற்றி பேச முடிகிறது?
(7) பழைய ஆடைகள் நைந்து கிழிந்துவிட புது ஆடைகளை உடுத்துவது போலா; காதலித்து கரம் பிடித்தவன் காலம் முடிந்துவிட இன்னுமொரு துணையை மனம் ஏற்றுக் கொள்வது; அவ்வளவு எளிதா?
(8) இருபக்க பெற்றோரும் வந்து கண்ணீர் சிந்தி அழுது அலமலர்ந்து போய் புலம்பிய போது; கல்லுக்குள்ளும் ஈரம் கசிந்து வந்தது; என்றுதான், மஹிமா நினைத்தாள்
(9) அடிக்கடி ஃபோன் பண்ணு; டேக் கேர்; ஸ்டே ஸேஃப்; என்ற சொற்களுடன் தோள் அணைத்து சொன்ன அத்தனை உறவினரும் இந்த இரண்டு மாதங்களில் ஒரு முறைகூட தன்னுடன் பேசவில்லை.
(10) திலீபனின் பெற்றோர்களாவது இருமுறை வந்து போனார்கள்.
(11) தன்னுடைய பெற்றோர்கள் இருமுறை ஃபோன் பண்ணுவதோடு , முடித்துக் கொண்டார்கள்.
(12) மஹிமாவை தம் இல்லத்திற்கு ‘வா!’ என்றோ; ‘எங்களோடு வந்து விடு’ என்ற அழைப்போ இல்லை என்பதை மஹிமா கவனிக்காமல் இல்லை
(13) திலீபன் ‘நமக்கு நாம்தான்; மஹிமா.’ என்று சொன்னதின் கருத்தை, இப்போது, அவள் நன்கு புரிந்து கொண்டு விட்டிருந்தாள்.
(14) வீட்டிற்குப் போக U திருப்பம் எடுத்தவளின் செவிகளில் நாய்க்குட்டிகளின். மெல்லிய தீனமான குரைக்கும் சத்தம் விழுந்தது.
(15) அந்தி சாயும் வேளை , பங்களூர் குளிரில் நடுங்கிக் கொண்டு, ஒருவரை இன்னொருவர், அணைப்பாக சரிந்த வண்ணம், நான்கு குட்டி நாய்கள் பாலத்தின் கீழ் பதுங்கியிருப்பதைக் கண்டதும்; அவள் மனம் திடுக்கிட்டு வருந்தியது.
(16) காரை பாலத்தின் ஓரமாக நிறுத்த அவைகளை நோக்கி இரண்டு தப்படி கூட வைத்திருக்காத நிலையில், பெரிய குரைத்தலுடன் அவளை நோக்கி நான்கு நாய் குட்டிகளும் பாய்ந்து வந்ததைக் கண்டு, மஹிமா, பயந்து மிரண்டு, அவைகளை விரட்ட முற்பட்டாள்.
(17) ஆனால்,அந்த சிறு ஜீவன்கள் அவளைச் சுற்றச் சுற்றி வந்து, அவர்கள் மொழியில், அவளிடம் அன்பை யாசித்ததை , மஹிமா நொடியில் புரிந்து கொண்டாள்.
(18) தனிமையில் வாடி அன்புக்கு ஏங்கும் எனக்கு நீங்களே என் அன்புக்கு வடிகால்.
(19) ஒரு அநாதைக்கே இன்னுமொரு அநாதையின் ஏக்கம் புரியும், என்ற எண்ணத்தில், நடு வீதி என்றும் பார்க்காமல்; அங்கேயே உட்கார்ந்து அவர்களை ஆறுதல் படுத்தி முனைந்தாள்.
(20) அந்த நாய் குட்டிகளுக்கு இல்லம் கொடுத்து, தன் தனிமையையும் அவள் போக்கிக் கொள்ள, உறுதி பூண்டவள், இன்றைய நாளை அற்புதமாக உணர்ந்தாள்.

One Comment on “சசிகலா விஸ்வநாதன்/ உறவு”

Comments are closed.