விஜயலக்ஷ்மி கண்ணன் /நூலகம் என் உலகம்

இன்று காலை என் இனிய நண்பர் ராஜப்பா என்னைத் தொலைபேசியில் அழைத்து” ரவி,இன்னிக்கு சாயங்காலம் நீ என்னோட ஒரு இடத்துக்கு வரப் போகிறாய். நான் உன்னை பிக் அப் பண்ணிக்கிறேன்”
என்ற அன்பு கட்டளையை மீற முடியவில்லை.

ஆழ்வார்பேட்டையில், ஒரு ஆறுமாடிக் கட்டிடம்.அது கட்டி முடிந்து ஐந்து அல்லது ஆறு வருடங்கள் இருக்கலாம்.
கீழ் தளத்தில் பெரிய ஹால் தனியாக இருந்தது. உள்ளே நுழைந்ததும் தலை நிலை கொள்ளவில்லை.
முழுவதும் புத்தகங்கள்,கூட்டம் கூட்டமாக அடுக்கி வைக்கப் பட்டிருந்தன.
பார்த்தவுடன் “என்ன இது!நம்ம அழகியசிங்கர் நூல் நிலையம் போல் இருக்கே,ராஜப்பா”என்றேன்.
“சரியான ஊகம் தான் .அவர் தான் மேற்கு.மாம்பலத்தில் இருந்து அவருடைய லைப்ரரியை இங்கே மாற்றி விட்டார்.நிறைய பேர் வந்து வாசிக்க நிறைய இடம் இருக்கு.
புத்தகங்கள் மலை போல் குவிந்து விட்டது.அதுவும் ஒரு காரணம்.இந்த ஹாலை அடுத்து இரண்டு அறைகள் உள்ளன.உட்கார்ந்து வாசிக்க.அருமையான திட்டம்”.

“நான் தினமும் மாலையில் இரண்டு மணி நேரம் இங்கே வந்து புத்தகங்களை அடுக்கி வாசிப்பவர்களுக்கு எடுத்துக் கொடுத்து உதவலாம் என்று பிளான்.அழகியசிங்கர் சார் மட்டும் தனியா எவ்வளவு தான் செய்வார்.இலக்கிய சேவையில் அவருக்கு அத்தனை ஈடுபாடு”என்றான் ராஜப்பா.
“நானும் உன்னோடு வரேன் டா”என்றேன் ஒரு தனி மகிழ்ச்சியோடு.

18.11.2025