
சென்னை நுங்கம்பாக்கம் ரயில்வே நிலையம் அருகில் கையில் விலையுயர்ந்த சூட் கேஸுடன் டிப் டாப்பாக உடை அணிந்த ஒருவர் ஆட்டோவை நிறுத்த, ஓட்டுநர் சரவணன் செல்லவேண்டிய இடத்தை கேட்டுக்கொண்டு ஆட்டோவை ஓட்ட ஆரம்பித்தான்.
ஆட்டோ விரைந்து சென்று கொண்டு இருந்தது. பயணி அவனை விரட்டிக்கொண்டு இருந்தார். “சீக்கிரம் போப்பா. நான் ஒன்பது மணிக்கு அங்கு இருந்தாகணும் ..”
பத்து நிமிடத்திற்கு ஒரு தடவை சரவணனை துரிதப்படுத்திக்கொண்டு இருந்தார் அந்த நபர்..
ஆட்டோ ஒருவழியாக வந்து சேர்ந்தவுடன் வந்து சேர்ந்த இடம் சென்னை ஏர்போர்ட் என்று பார்த்த நபர் திகைப்புடன் சரவணனிடம் பதறிப்போய் கேட்க “நீங்கள் தானே சார் பாரிஸ் போகணும்னு சொன்னீங்க.. அதான் பன்னிரண்டு மணி பிளைட்டுன்னு நினைச்சி உங்களை இங்கே கொண்டு வந்து விட்டேன்.”.- சரவணன் சொன்னான்.
“தம்பி. டைலர் கடையை மூடுறதுக்கு முன்னால பாரிஸ் கார்னர் போகணும்னு நான் சுருக்கமா பாரிசுன்னு சொன்னேன்”..
சரவணனுக்கு அந்த சூட் கேஸ் மற்றும் டிப் டாப் உடை மீது அனாவசியமாக கோபம் வந்தது. கோபம் வந்து என்ன செய்ய ?

கதை சூப்பர் ..குட்டிக்கதைக்கு அழகான ஒரு ட்விஸ்ட் ..