நாகேந்திர பாரதி /தனிமையில் இனிமை

இனித்திருக்கும் நினைவுகளைக்
கொடுத்து விட்டுச் சென்றதனால்

அணைத்திருக்கும் இன்பத்தை
அனுபவித்துப் பார்த்ததினால்

பிணைத்திருக்கும் அருகாமை
பிரித்து விட்டுச் சென்றாலும்

துனித்திருக்கும் கண்ணீரைத்
துடைத்து விட்டுப் பழகியதால்

தனித்திருந்தும் கவலையில்லை
தவிப்பிருந்தும் துன்பமில்லை