
17-10-25 -இல் அழகியசிங்கர் நடத்திய இணையவழிக் கவியரங்கில் வளவ.துரையன் வாசித்த கவிதை8
அந்தக் கோயிலின்
உள் பிரகார மூலையில்தான்
அவனும் அவளும் சந்திக்கிறார்கள் ஓர் ஆறுமாத காலமாக
புறாக்களைப்
போல எப்போதும்
குசுகுசுவென்று
ரகசியப் பேச்சுகள்தாம்.
சிறு சிறு முறுவல்கள்
லேசான தொடுகைகள்
இப்போது
ஒரு வார காலமாய் அவளிருந்தாள்
அவன் இல்லை
அடுத்த வாரம் அவன் இருக்க அவளைக் காணோம்
எல்லாவற்றையும்
கண் விழித்து எப்போதும் பார்த்த அகல் விளக்குகள் அழுதன
கோயில் யானையோ தலையாட்டிக் கொண்டு சிரித்தது
