சுரேஷ் ராஜகோபால்//”பறவை கூட உரையாடல் “

14 11 2025 அன்று மாலை இணையக் கவியரங்கில் படித்த
என் இரண்டாவது கவிதை:

செரித்ததை உரமாக்கும்
பறவைகளே
செரிக்காததை என் செய்வீர் என்றேன். 1

என் வினாவுக்கு பதில் வந்தது
செரிக்காததை மரமாக்குவோம்
என்றதே பார்க்கலாம். 2

இயற்கை சுழற்சியில்
எதுவும் வீணாவதில்லை
சொல்லியே போயிற்று. 3