
“டேய், குழந்தை அழறது கூடத் தெரியாம அப்படியென்ன கிழிக்கற?” தர்ஷா கூவினாள்.
“ஒரு நிமிஷம், துணி உலர்த்தி முடிச்சுட்டேன்! இதோ வந்துட்டேன்!” அபினவ் கையைத் துடைத்துக் கொண்டே பரபரப்பாக வந்து குழந்தையை வாரிக் கொண்டான்.
பால் கொடுத்துக் கொண்டே LinkedIn மெயில் செக் பண்ணினான். உதட்டைப் பிதுக்கினான்.
மொபைல் ரிங்கியது. பிரவீண்.
“கங்கிராட்ஸ் அபி! போட்டிக்கு நீ அனுப்பிய ஓவியம் அந்தப் பெண்கள் பத்திரிகையில் ஃபர்ஸ்ட் பிரைஸ் வாங்கியிருக்கு! ஒரு பெண்ணின் வாழ்க்கையை இதைவிட அற்புதமாகச் சித்தரிக்க முடியாதுன்னு பாராட்டியிருக்காங்க! எப்படிடா உன்னால இப்படி யோசிக்க முடியுது?”
“அதுவொண்ணும் பெரிய விஷயம் இல்லைடா. வேலை போனதுலேருந்து நான் அதைத்தான செய்யறேன்! என்ன, பெண் படம் போட்டதால இளகிப்போய் பரிசு குடுத்திருக்காங்க! அதுவே ஒரு ஆண் படம் போட்டிருந்தால் காமெடியா எடுத்துட்டுப் போயிருப்பாங்க!”
பிரவீணுக்கு அவன் சொல்வது நூறு சதம் உண்மை என்று தோன்றியது. உங்களுக்கு?
வசந்தா கோவிந்தராஜன்/தப்பித்த சாம்ராஜ்யம் – விருட்சம் நாளிதழ்

கற்பனை நன்றாக உள்ளது
.
சில நாட்களில் நிஜமாகும்_ அடுத்த தலைமுறையிலாவது.
அபினவ் பாவம்..அருமை
நல்ல கற்பனை ஆனால் அது நிஜமாகும் காலம் வெகு தூரத்தில் இல்லை.. கதை மிக அருமை
கதை super
ஆமா, ஆமா. கரெக்ட்தான். நல்ல கற்பனை. அழகா வந்திருக்கு. வாழ்த்துகள் மா.