ஸ்ரீராம்/பம்பர பரிமளா

பத்து நாள் லீவு போட்டு படுக்கையில் உடம்பு சரியில்லாமல் படுத்து இருந்தார் பத்மநாபன். படுக்கையில் படுத்தபடி பார்த்துக் கொண்டிருந்தபோதுதான் பரிமளாவின் இன்னொரு பரிமாணம் தெரிந்தது. காலை எழுந்து தன்னுடைய சிறு வேலைகளை பார்ப்பதே மிகவும் அலுப்பாகத் தெரிந்த அவருக்கு , காலை எழுந்தது முதல் பம்பரமாய் சுழலும் பரிமளா புதிய கோணத்தில் தெரிந்தாள். இந்த நான்கு வருடங்களில் இதுவரை அவர் கவனித்திராத பரிமளா!
பல் விளக்கி பாத்ரூமில் இருந்து வெளிவந்ததிலிருந்து கோலம் போட்டு நிமிர்ந்து, பாலை எடுத்து ஃப்ரிட்ஜில் வைத்து, காபி கலப்பதிலிருந்து, காய்கறி நறுக்கி கொண்டே சமையலையும் கவனித்துக் கொண்டே இவரையும் கவனித்துக் கொண்டு குழந்தையும் கவனித்துக் கொண்டு நடுவே வீட்டிலிருந்து வேலை என்று ஆபீஸ் வேலையும் பார்த்துக் கொண்டு குப்பையை பெருக்கி ஓரமாக கொட்டி வேலைக்காரியை சமாளித்து…..
எப்போது குளித்தாள், எப்போது பூஜை செய்தாள் என்று தெரியாத அளவுக்கு நடுவே அதுவும்…
பல கைகளை உடைய அம்மனின் சொரூபம் போலவே இவர் கண்களுக்கு தெரிந்தாள்.
பத்து நாள் படுக்கை பத்மநாபனை மாற்றி இருந்தது. இப்போது எல்லாம் அவர் பாத்திரம் தேய்ப்பதில் இருந்து காய்கறி நறுக்குவது வரை தன்னால் முடிந்த உதவிகளை தினமும் செய்கிறார்.

ஸ்ரீராம்/தாத்தாவின் பொக்கிஷம் – விருட்சம் நாளிதழ்

4 Comments on “ஸ்ரீராம்/பம்பர பரிமளா”

Comments are closed.