
கடைசி மூச்சை விட காத்திருந்தார் ராமு தாத்தா.
அவர் படுக்கை அருகில் குழுமி நின்றார்கள் அவரது இரண்டு மகன்களும் பேரன்களும்.
அவர்கள் முகத்தில் ஏதோ ஒரு எதிர்பார்ப்பு தெரிந்தது.
கண்களில் ஏக்கம் இருந்தது.
தான் சேர்த்த புத்தகங்களை யாரும் படிக்கவில்லை என்கிற குறை தாத்தாவுக்கு.
மகன்களுக்கோ பேரன்களுக்கோ புத்தகம் படிக்கும் பழக்கமும் ஆர்வமோ இல்லை என்பது பெரிய வருத்தம் அவருக்கு.
தனக்கு பின் அவை என்ன ஆகும் என்கிற கவலையும் இருந்தது அவருக்கு.
அவர் கண்களிலும் அந்த ஏக்கம் இருந்தது.
தாத்தா நிறைய சொத்து வைத்திருக்கிறார் என்று எண்ணம் அவர் மகன்களுக்கும் பேரன்களுக்கும்.
அதை எங்கோ ஒளித்து வைத்திருக்கிறார் என்றும் அவர்களுக்கு சந்தேகம்.
நீண்ட நாட்களாகவே அதை அவர் சொல்வார் என்று எதிர்பார்த்து காத்திருந்தார்கள்.
காத்திருந்து காத்திருந்து ஏமாற்றம் தான் மிச்சம்.
இப்போதோ அவர் தன் கடைசி படுக்கைகள் இருக்கிறார் என்று தெரிந்தது.
அதை இப்போதாவது தங்களிடம் சொல்வாரா என்று காத்திருந்தார்கள்.
தன் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்த உறவுகளிடம் “நான் சேர்த்து வைத்துள்ள புத்தகங்களில் ஏதோ 10 புத்தகங்களில் நான் சொத்து வைத்திருக்கும் இடம் பற்றிய க்ளூ இருக்கிறது.
சிகப்பு நிற பென்சிலால் அடிக்கோடிட்டு வைத்திருக்கிறேன்.
அதனை எடுத்து கண்டுபிடிக்க வேண்டும்.
அதை வரிசையாக ஒரு பேப்பரில் எழுதவேண்டும்.
அதை ஒழுங்கு படுத்தி ‘டீ கோட்’ செய்தால் சொத்து இருக்கும் இடம் தெரியும் ” என்று கூறி நிறுத்தினார்.
அதோடுஉயிரை விட்டார் ராமு தாத்தா

அருமை சார்
நன்றி.
Awesome 👏😂
சூப்பர் ஸ்ரீராம், வித்தியாசமான முடிவு வித்தியாசமான சிந்தனை.
கீதா
சிக்கவைத்துவிட்டாரே மனுஷன்
தாத்தாவின் அன்பு என்னே!!
அருமையான முடிவு!