
பரணிதரனுக்கு மிகவும் கவலையாய் இருந்தது. இதுவரை தான் சேகரித்துவைத்த நூல்களைப் பார்த்தபடியிருந்தார்.
ஒவ்வொரு நூலும் ஒருகதை சொல்லும் …அறிவைத்தாங்கி
நிற்கும் அனைத்தும் அநாதையாய்ப்போனதுபோல்ஓர்
உணர்வு.
வாசிக்கும் பழக்கம் அறவே குறைந்துபோன நிலையில்….இதனையெல்லாம் இனியார் வாசிக்கப்போகிறார்கள்.உறவுகள் கண்காணத்தொலைவில்.தன்னைப் பார்க்கவே ஆள் இல்லாத நிலையில் யார் இதனைப் பாதுகாத்து பராமரிக்கமுடியும்.
இந்தப்புத்தகங்களால் அவரது மனைவியிடமோ ..உறவுகளிடமோ எந்தவித மரியாதையும்
அவருக்குக் கிடைத்ததில்லை.
பிழைக்கத்தெரியாதவர்…வீண்கற்பனையில் வாழ்பவர் என்ற
அவமரியாதைதான் நூல்களால் கிடைத்த பட்டம்.
ஆனால் எல்லோரும் போல்
வாழ்வதுதான் ஒரு வாழ்க்கையா…தனது வாழ்க்கைக்கு இந்த நூல்கள்தான் அடைக்கலம் கொடுத்திருக்கின்றன.அவை தந்த மன அமைதிக்கு என்ன செய்தாலும் தகும்.ஒவ்வொரு நூலும் ஒரு மனிதனின் ஆத்மா.ஆத்மாவை அழிப்பது மனிதனின் வேலையில்லை.
அவற்றிற்கு அடைக்கலம் கொடுத்து காப்பது தன்கடமையென்று உணர்ந்தார் அவர்.
தனது சொத்துகளையெல்லாம் விற்று …ஒரு அறக்கட்டளை ஏற்படுத்தி புத்தகங்களை பாதுகாக்கும் நூலகமாய் மாற்றினார் .அறக்கட்டளை வங்கியில் வைத்த வைப்புத்தொகை வட்டியில் அது தொடர்ந்து நடக்கும்.
மனிதர்கள் ஒன்றும் இவ்வுலகில் அரிகிப்போய்விடவில்லை.புத்தகங்களை நேசிப்பவர் யாராவது ஒருவர் இருந்தாலும்
போதும் ….புத்தகங்கள் என்றும்
இருக்கும்.

கதை மிக அருமை. வித்தியாசமாகவும்.
கீதா
புத்தக இன்சூரன்ஸ்.