
மணி அண்ணாவைப் பார்த்தாலே சுரேஷுக்குப் பற்றிக் கொண்டு வரும்.அவனும் அவன் தீத்தழும்பேறிய அசிங்கமான மூஞ்சியும்! அம்மாவும்,அப்பாவும் அவனைத் தலையில் வைத்துக் கொண்டாடுவார்கள்.சின்ன வயசிலேயே அம்மா,அப்பாவை இழந்த மணி அண்ணா _ சுரேஷின் பெரியப்பா பிள்ளை_ இவர்கள் வீட்டிலேயேதான் வளர்கிறான்.இவன் மேல் கொள்ளைப் பிரியம் அண்ணாவுக்கு. சுரேஷ்…சுரேஷென்று உயிரை விட்டாலும் , சில நேரங்களில் அறிவுரை சொல்வது சுரேஷூக்குப் பிடிக்காது.
அன்று ஞாயிற்றுக்கிழமை ஓய்வாகத் தூங்கிக் கொண்டிருந்த சுரேஷ் கூடத்தில் அம்மா, அப்பா பேச்சுக் குரல் கேட்டு விழித்தான்.பேச்சில் தன் பெயரும் அடிபடக் காதுகளைக் கூர்மையாக்கிக் கொண்டான்.
“பாவங்க மணி.நல்ல பிள்ளை.ஆனால் கல்யாணம் அமையவே மாட்டேங்குதே”_ இது அம்மா.
” ஆமாம்மா…நம்ம சுரேஷ் குழந்தையா இருக்கும் போது நம்ம வீட்டுல நடந்த தீ விபத்துல தூளில தூங்கிக் கொண்டிருந்த சுரேஷைக் காப்பாத்தறதுக்காக தைரியமா தீயில் குதித்து…பாவம் அந்தத் தழும்பு முகம் முழுக்க இருக்குறதால…
எந்தப் பெண்ணும் அவனைக் கல்யாணம் பண்ணிக்க மாட்டேங்கறாளே…. அவங்க எல்லாருக்கும் அவன் நல்ல மனசு புரியுமா?”_தழுதழுத்தார் அப்பா.
சுரேஷுக்கு விழிகள் சுரந்தன.எதேச்சையாக இவனை அழைத்துக் கொண்டே வந்த மணி அண்ணாவிடம்,” அண்ணா! நான் காலேஜ் முடிச்சிட்டு நல்ல வேலை கிடைத்ததும், உடனே உங்கள் முகத்தை பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை செய்ய ஏற்பாடு செய்யப் போறேன் “, என்று கூறிய சுரேஷைத் தழுவிக் கொண்ட மணி அண்ணா பேரழகனாகத் தெரிந்தான் சுரேஷ் விழிகளில்!

இந்தப் படத்துக்கு பொருத்தமான கதை. வாழ்த்துகள் தோழி.
நன்றி தோழி
முனைவர் சிவகாமசுந்தரி நாகமணி
கதை நன்றாக உள்ளது. அருமையான subject. ஆனால் மிக மிக சிறிதாக…முதல் வரியை வாசித்துக் கொண்டிருக்கையிலேயே இறுதி வரி வந்து விட்டது. இன்னும் கொஞ்சம் வளர்த்தி இருக்கலாம். மற்றபடி நடை அருமை.
இப்பொழுதெல்லாம் கதைகளின் மேல் அதிக கவனம் செலுத்தி வருகிறீர்கள். குமுதம் அல்லது விகடனுக்கு ஒருபக்க கதை பகுதிக்கு அனுப்பி வையுங்கள் சகோதரி. All the best.
இது இருபது வரிக் கதை சகோதரரே
நன்றி
இந்தப் படத்துக்கு மிகவும் பொருத்தமான கதை சுந்தரி.
வாழ்க வளமுடன்.
நன்றி சகோதரி
அருமை மிகவும் பொருத்தமான அழகான கதை வாழ்த்துக்கள்
நன்றி வள்ளி அக்கா 🙏
வாவ் கதை படிக்கும்போது பாவமன்னிப்பு சிவாஜியும், கதைதலைப்பைப்பார்த்து சூர்யாவும் என்நினைவைக்கு வந்தனர்.
நன்றி சகோதரரே 🙏
கதை நன்றாக உள்ளது. அருமையான subject. ஆனால் மிக மிக சிறிதாக…முதல் வரியை வாசித்துக் கொண்டிருக்கையிலேயே இறுதி வரி வந்து விட்டது. இன்னும் கொஞ்சம் வளர்த்தி இருக்கலாம். மற்றபடி நடை அருமை.
இப்பொழுதெல்லாம் கதைகளின் மேல் அதிக கவனம் செலுத்தி வருகிறீர்கள். குமுதம் அல்லது விகடனுக்கு ஒருபக்க கதை பகுதிக்கு அனுப்பி வையுங்கள் சகோதரி. All the best.
கொடுக்கப் பட்டுள்ள படத்துக்குப் பொருத்தமான கற்பனை. வாழ்த்துகள் ப்ரொஃபஸர்.
Thank you sir
Thank you sir
ஒரு நம்பிக்கையற்ற மனிதனின், வாழ்வில் ஒளியேற்ற இன்னொரு கை வரும் என்ற நம்பிக்கை விதைகள் விதைத்தது இந்த கதை.
நிறைய எழுதுங்கள்.
வாழ்த்துக்கள்.
ஜெயானந்தன்.
நன்றி சகோதரரே.நம்பிக்கை விதைகள் கூட என் சிறுகதைத் தொகுப்பின் பெயர்.புஸ்தகாவில் வெளி வந்தது.நன்றி