சிவா/உறுத்தல்

ஏதோ வேகத்தில் வரைந்துவிட்டேன்.
அவசரம்தான், இப்படி என திட்டமிடவில்லை.
இருக்கும் வண்ணங்களை கொண்டு ஒரு முகம்.
ஏதோ குறைவதாக எனக்கு மட்டும் உறுத்திக்கொண்டே இருந்தது.
பார்வையிட வந்தவர்களோ பாராட்டித் தீர்த்தனர்.
ஆனாலும் என்ன குறையென்று யோசித்துக்கொண்டே இருந்தேன்.
பார்வையாளர் அற்ற ஒரு நேரம் முழுமையாக ஆராய்ந்தேன்.
இன்னும் வண்ணங்கள் சேர்க்கலாமாவென யோசித்தேன்.
அந்த ஓவியத்தின் கீழேயே தலைகுனிந்து அமர்ந்து யோசித்தேன்.
“கண் வலிக்கிறது, கொஞ்சம் இமையை மூடிவிடேன்” என்ற குரல் கேட்டு நிமிர்ந்தேன். யாரும் இல்லை.

ஸ்ரீராம்/புருஷமரம் – விருட்சம் நாளிதழ்

5 Comments on “சிவா/உறுத்தல்”

  1. எவ்வளவு குட்டிக்கதையில் உணர்வுகளை கொண்டு வர முடியுமா ..அது உங்களால் முடியும் என்று நிரூபித்து விட்டீர்கள் அருமை சகோ ..

Comments are closed.