
“கால் வலி தாங்க முடியவில்லை” என்று காலில் மருந்து தேய்த்துக் கொண்டே சொன்ன மலரைப் பார்த்து விட்டு மௌனமாக கடந்து சென்றார் சாமிநாதன்.
மலருக்கு இது வழக்கம்தான். மன வலிகளைச் சொன்னாலும், மன வருத்தங்களை சொன்னாலும், ஏன் சந்தோஷங்களைச் சொன்னாலும் கூட அது என்னவோ, அவர் முகத்தில் எந்த உணர்ச்சியும் காட்டுவதில்லை. பதில் என்று ஏதாவது வருவது மிக மிக அபூர்வம். வருடக்கணக்கில் இந்த உணர்ச்சியற்ற முகத்தை பார்த்துப் பார்த்து மலருக்கும் மனம் மரத்து விட்டது. வாசல் பக்கம் சென்று மரத்தடியில் உட்கார்ந்து முன்பெல்லாம் புத்தகம் படிப்பார். இப்போதெல்லாம் செல்லை நோண்டிக் கொண்டிருக்கிறார்.
ஏனோ மலருக்கு இப்போது எல்லாம் அவர் முகத்தை பார்க்கும் போது அவர் முகமே ஒரு மரமாக தெரிவது போல இருக்கிறது.

ரொம்ப அருமையாக எழுதியிருக்கீங்க, ஸ்ரீராம். படத்துக்கு ஏற்ப அப்படியே!
கீதா
நன்றி கீதா.
ஸ்வாமிநாதனின் மன இறுக்கத்துக்கு என்ன காரணமோ!!
காற்றின் மொழி படத்தில் வரும் M S BHASKAR கேரக்டர் ஞாபகத்துக்கு வருகிறது.
சிடுமூஞ்சி for a reason !!
நன்றி Devibalan
அருமையான தலைப்பு!
நன்றி.