அனுராதா ஜெய்ஷங்கர்/நியூரான் தீற்றல்

யுரேகா என்று கூவாத குறையாக தனது அறிவியல் ஆய்வுக் கூடத்தில் இருந்து வெளியே வந்தான் துருவ்.

” ஒரு புது இயந்திரத்தை கண்டுபிடித்து இருக்கிறேன். அதன் முதல் பயனாளியாக உங்களுக்கு அதை உபயோகப்படுத்துவதற்கு அனுமதியும் வாங்கி விட்டேன்” என்று மகிழ்ச்சியுடன் தந்தையிடம் சொன்னான்.

” என்னப்பா செய்யும் அது?”

“ஒவ்வொரு மனிதனும் வாழ்க்கையில் எதிர்கொள்ளும் ஒவ்வொரு சவாலான சிக்கலான விஷயமும் அவன் மூளையில் நியூரான்களில் ஒரு குறிப்பிட்ட விதமான தடத்தை ஏற்படுத்திவிடும். அதைத்தான் அனுபவம் என்று சொல்கிறோம்.

எனது இயந்திரம் அந்த மாதிரியான நியூரான் தடங்களைக் கண்டுபிடித்து ஒருவரின் முடிவெடுக்கும் திறனில் அனுபவத்தின் பங்கு எவ்வளவு என்பதை முடிவு செய்யும். இது எங்களது ஹியூமனாயிட் ஆராய்ச்சிக்கு தேவைப் படுகிறது. பங்கு பெறுபவருக்கு பரிசாக அந்த தடங்களையே ஓவியத் தீற்றல்களாக மாற்றி அவரது முகத்தை வரைந்து தரும். அது ஒவ்வொருவருக்கும் தனித்துவமானது”.

பரிசோதனைக்குப் பின் கிடைத்த அப்பாவின் படத்தைப் பார்த்து நெகிழ்ந்து போனான் துருவ்.

ஒவ்வொரு வண்ணத் தீற்றலின் ஆழமும் அகலமும் அவர் கடந்த வலிகளின் அளவீடு என்பதைத் தெரிந்த துருவுக்கு இதைவிட அழகான அப்பாவின் படம் இருக்கவே முடியாது என்று தோன்றியது.

சாந்தி சந்திரசேகரன்/அதே முகம்..! – விருட்சம் நாளிதழ்


***

5 Comments on “அனுராதா ஜெய்ஷங்கர்/நியூரான் தீற்றல்”

  1. ஆஹா, ஆஹா, அற்புதமான கருத்து. அருமையா எழுதியிருக்கீங்க. அப்பாவின் ஓவியம், அவருடைய வலிகளைப் பிரதிபலிக்கும் படி. அடேங்கப்பா ரக தீம் இது. அசத்தல். இந்த போட்டிகள் ஒவ்வொண்ணுக்கும் உங்கக் கதைகள் ஒண்ணை ஒண்ணு மிஞ்சற மாதிரி இருக்கு. விடாதீங்க. எழுதித் தள்ளுங்க. வாழ்த்துகள்.

Comments are closed.