வளவ. துரையன்
பாற்கடலில்
படுத்திருக்கும் பரந்தாமனே
பத்தாவது எப்பொழுதென்றேன்
பதிலின்றிச் சிரித்தார்
கண்ணுக்குத் தெரியாமல்
கைகுலுக்க வழியின்றி
முகம் வாய் மூடிவிட்டு
மூச்சுக்குக் காற்றின்றி
படுக்கையும் இல்லாமல்
புதைக்கவும் இடமின்றி
எரிக்கவும் விறகின்றி
எடுத்ததுதான் பத்தோ?
எம்பெருமான் சிரித்தார்
கையூட்டுக் கைகளிலே
அகத்தின் அழுக்கு
முகத்தில் வடிகிறது
தருக்களைத் தரிசாக்கித்
தகர்த்தீர் நற்காற்றை
எதிரதாக் காக்கும்
அறிவினை இழந்தவர்
இப்போது புலம்புகிறீர்

கடலூரில் இருந்து கனமான கவிதை!