நாபா.மீரா/விடியாமூஞ்சி

அம்மா… ஈவ்னிங் காலேஜீல ஸ்பெஷல் கிளாஸ் இருக்கு. வீட்டுக்கு வர நாழியாயிடும்… சொல்லிக்கொண்டே வாசலுக்கு வந்த லாவண்யா முகம் சுளித்தாள்.
போச்சு… இன்னைக்கு இந்த விடியாமூஞ்சி
மொகத்துல முழிச்சிட்டுப் போறேனா…விளங்கினாப்பலத்தான்…
சுகன்யா சொன்ன மனிதன்…. பார்ப்பதற்கு குரூபியாக இருந்த அவனை அந்த ஏரியாவில் யாருக்குமே பிடிக்காது.
மாலை தாண்டி இருட்டத் தொடங்கியது.
கல்லூரி வகுப்பு முடிந்து திரும்பிய லாவண்யாவை ..சில காலிப்பயல்கள் வழிமறிக்க…..
ஆளரவம் கேட்டு… தலைதெறிக்க ஓடினர் அந்த காலிப்பயல்கள்.கைகூப்பி நன்றி சொல்ல நிமிர்ந்த லாவண்யா அதிர்ந்தாள்.
வழக்கம் போல எந்த எதிர்வினையும் இல்லாமல் நகர்ந்தான் அந்த
குரூபி.

சந்தியா ஷங்கர்/”அமானுஷ்யம்” – விருட்சம் நாளிதழ்