
தமிழில் : சு.கிருஷ்ணமூர்த்தி
வங்காளக் கதைகள்
குருக்ஷேத்திரத்தின் யுத்த களத்திலிருந்து ஒரு குரோச தூரம், ஒரு பரந்த ஏரி. அதைச் சுற்றிலும் பிரும்மாண்டமான மரங்கள். சூரியன் மேலை வாயிலில் மறையவிருக்கிறான். வான மெங்கும் அவனது செவ்வொளி.
ஒரு மரத்தடியில் அமர்ந்திருக்கிறார் ஒரு முனிவர். அடர்ந்த தாடியால் மறைக்கப்பட்டுள்ள அவரது முகத்தில் கண்கள் மட்டுமே புலப்படுகின்றன. ஆழ்ந்த பார்வையுடன் ஓலையில் ஏதோ மும்முரமாக எழுதிக்கொண்டிருக்கிறார் அவர்.
ஆம்! அவர்தான் சத்தியவதி புதல்வர், கிருஷ்ண த்வைபாயனர், வேத வியாசர்.
அப்போது அங்கு ஓடோடி வந்தான் ஒரு வீரன். அவன் அணிந்திருந்த அரச உடை கிழிந்து அலங்கோலமாயிருந்தது. அவனது தலையில் மகுடமில்லை. அவனது அங்கமெல்லாம் காயங்களும் இரத்தக் கறையும், அவனது கையில் கதை. ஆம், அவன்தான் துரியோதனன்.
வியாசரைக் கண்டதும் தன் கதையின் மேல் சாய்ந்தவாறு நின்றுகொண்டான் அரவக் கொடியோன். எழுத்தில் முழுக் கவனத்துடன் ஈடுபட்டிருந்த முனிவர் அவனைக் கவனிக்கவில்லை. அவன் அவரது கவனத்தை ஈர்க்கத் தன் தொண்டையைக் கனைத்துக் கொண்டான். வியாசர் தலை நிமிர்ந்து பார்த்தார். துரியோதனனைக் கண்டு திடுக்கிட்டார்.
துரியோதனன் கேலியாகக் கேட்டான்: “முனி சிரேஷ்டரே, என்னைத் தெரிகிறதா?”
“ஓ தூரியோதனா? யுத்தகளத்திலிருந்து ஓடி வந்து விட்டாயா?… வேள்வியைத் தொடங்கிய நீ கடைசியில் புறமுதுகு காட்டி குரு வம்சத்தையே பூண்டோடு அழிப்பதற்காக இந்த சொன்னாலும் நீ கோழையல்லவே! உன் உறவினர் எல்லோரும் ஓடி வந்து விட்டாயா? உன்னைப் பற்றி யார் என்ன குற்றம் அழிந்த பிறகும் நிலைத்திருக்க ஆசையா உனக்கு?”
“உங்கள் கேள்விகளுக்குப் பதில் அப்புறம் சொல்கிறேன். முதலில் நீங்கள் சொல்லுங்கள்-என்னை எப்படி அடையாளம் கண்டு கொண்டீர்கள்? நாமிருவரும் ஒருபோதும் சந்தித்த தில்லையே?”
‘என்ன சொல்கிறாய் துரியோதனா? யுத்தம் செய்த களைப்பில் உனக்குப் புத்தி பிசகி விட்டதா……? நான் எப்போதும் உன்னைத் தானே நினைத்துக் கொண்டிருக்கிறேன்! நான் படைத்துக் கொண்டிருக்கும் இந்த மகாபாரதக் கதையின் நாயகனே நீதானே! உன் பொறாமையும் கர்வமும் வீரமும்தானே என் காவியத்தின் உயிர்! உன்னை அடையாளம் கண்டுகொள்ள முடியாதா என்னால்? நான் உன் பாட்டனல்லவா?”
கோபத்தால் கண்கள் சுழல துரியோதனன் சொன்னான், “இரத்த உறவால் நீங்கள் என் பாட்டனென்பது எனக்குத் தெரியும். ஆனால் நான் இதுவரை உங்களுடன் ஒரு வார்த்தை கூடப் பேசியதில்லை. நான் சிறு குழந்தையாயிருந்த போதுகூட நீங்கள் ஒருமுறையேனும் என்னை அன்போடு உச்சி முகர்ந்ததில்லை, ஏன், என்னைப் பார்த்தது கூட இல்லை. ‘கௌரவரும் பாண்டவரும் எனக்கு இரு கண்கள் போன்றவர்கள்’ என்று நீங்கள் அடிக்கடி சொல்வீர்களாம். ஆனால், நீங்கள் பாண்ட களுக்கு உபதேசம் செய்திருக்கிறீர்கள். எங்களை ஒருதடவை வருக்கு குறைந்தது எட்டு முறைகள் தரிசனம் அளித்து அவர் கூடச் சந்தித்ததில்லை நீங்கள் !”
“நீ கணக்கில் மிகவும் கெட்டிக்காரனாயிருக்கிறாயே, கௌரவர், பாண்டவர் அப்பா…..! பற்றியெல்லாம் பேசிப் பயனென்ன?…. ஆனால் இந்தக் கடைசி காலத்தில் இதைப் இரு தரப்பினருமே என் பேரப் பிள்ளைகள்தாம். ஆனால், கொடுமைப் படுத்தப்பட்டவர்கள், உங்களைவிட பாண்டவர்கள் துரதிர்ஷ்டசாலிகள், உங்களால் அவர்களுக்குப் பரிவு அதிகம்தானே இருக்கும்! என்ன விசேஷம்?
“உங்களைச் சில கேள்விகள் கேட்க விரும்புகிறேன்…. பாண்டவர்கள் எங்களைவிட அதிகம் கஷ்டத்துக்குள்ளா னார்கள் என்பதற்காக அவர்களிடம் அதிகப் பரிவு காட்டினீர்கள், அது சரிதான். ஆனால் எங்கள் தாய் காந்தாரி உங்களுக்கு என்ன தீங்கு செய்தாள்?”
“உன் தாய் பெரும் புண்ணியவதி. அவளுக்கென்ன?”
“அப்படியானால் ஏன் அவளிடம் இவ்வளவு இரக்கமின்றி நடந்து கொண்டீர்கள்…? அவள் யாரிடமும் எதையும் யாசித்த தில்லை. நீங்கள் வலியச் சென்று அவளுக்கு ஒரு வரமளிக்க முன்வந்தீர்கள். முனிவரே வரும்போது மறுப்பது உசிதமில்லை என்று என் தாய் நற்குணங்கள் பொருந்திய புதல்வனை உங்களிடம் யாசித்தாள். என்ன கொடுத்தீர்கள்?” என்று துரியோதனன் பொருமினான்.
வியாசர் சாந்தமாகச் சொன்னார். “துரியோதனா, உனக்கு அந்த நிகழ்ச்சி பற்றிச் சரியாகத் தெரியவில்லை. உன் தாய் வேண்டியது நூறு புதல்வர்களை. நானும் அவ்வரமளித்தேன். ஆனால் குந்திக்கு யுதிஷ்டிரன் பிறந்த செய்தி கேட்ட பின் உன் தாய்க்கு தன் கர்ப்பத்தை தாங்கிக்கொண்டிருக்கப் பொறுமை யில்லை. அவள் உரிய காலத்துக்கு முன் தன் கர்ப்பத்தை வெளியில் விட்டுவிட்டாள். அதனால்தான்…”
“என்னைச் சற்றுப் பேச விடுங்கள், பிதாமகரே! என் தாய் நூறு புத்திரரை வேண்டியது உண்மைதான். ஆனால் அதற்காகத் தன் வயிற்றில் அவ்வளவு பெரிய மாமிசப் பிண்டத்தை தாங்கிக் கொள்வது எத்தகைய நரக வேதனை! என் சிற்றன்னை குந்திக்கு முன்பே சூல்கொண்டவள் என் தாய். ஆகவே இயற்கை நியதிப்படி அவள்தான் என்னை யுதிஷ்டிரன் பிறக்குமுன் பெற்றிருக்க வேண்டும். அப்போது நான் யுதிஷ்டிரனின் அண்ணனாருப்பேன். அந்த உரிமையை நான் இழந்தது உங்களால்தானே?” புன்சிரிப்புடன் பதிலளித்தார் வியாசர், “அதற்கும் ஒரு காரணம் உண்டு. அதுதான் என் கற்பனைத் திறன். வால்மீகி போன்ற கவிகள் இத்தகைய அபூர்வமான நிகழ்ச்சியைக் கற்பனை செய்திருக்க முடியாது. நான் ஓர் அமரகாவியம் படைப் பதற்காக உங்களுடைய பிறப்பை இவ்வாறு தீர்மானித்தேன்”
“அமரகாவியம் படைக்கவா ?””
“ஆமாம். மனிதன் சாகப் பிறந்தவன். நீயும் மண்ணாகிப் போவது திண்ணம்.. உன் போன்ற மாவீரர்களும்கூட என்றாவது ஒருநாள் மடிந்து மண்ணோடு வாழ்க்கையை ஓர் அபூர்வ இதிகாசத்தின் கருப்பொருளாக இருந்தது. … ஆகையால் அவர்களது பிறப்பு விஷயத்தில் தலையிட அமைத்து விட்டேன்… பாண்டவருக்குத் தெய்வ அனுக்கிரகம் கிடைத்தது. . கவிகள் படைப்பாளிகள்…. ஊனும் உதிரமும் முறையில் உங்கள் வாழ்க்கையைச் சமைக்கும் வாய்ப்பு கிடைத்தது. ….”
“புரியவில்லை எனக்கு.”
“உனக்குப் புரியாது. ஆனால் வருங்காலம் இதைப் புரிந்து கொள்ளும்.’
“எங்கள் தாய் நற்குணம் வாய்ந்த புத்திரரைத்தானே யாசித்தாள்? புண்ணியவதியான அவளுக்கு நீங்கள் அளித்த பரிசு என்ன?” துரியோதனன் மடக்கினான்.
“குருசிரேஷ்டனே! உன் தாய் பெருமை வாய்ந்தவள். அவளுக்குப் பெருமையளிப்பது என்ன தெரியுமா? அவள் அனுபவிக்க நேர்ந்த மகத்தான துன்பம்தான். அந்திப் பொழுதாகி விட்டது துரியோதனா! பறவைகள் தங்கள் கூடுகளுக்குத் செல்லும் ஜீவன்கள் போல… நீயும் உன் துன்பங்களை சுவர்க்ர்க்கத்துக்கு உன்னைத் தயார் செய்து கொள்.”
“எனக்குச் சுவர்க்கம் அவசரமொன்றுமில்லை.”
“நன்றாயிருக்கிறது நீ சொல்வது! நீ இறக்காவிட்டால் யுதிஷ்டிரன் அரியணையேறுவது எப்படி? நீ எங்கிருந்தாலும்
பாண்டவர் உன்னைக் கண்டுபிடித்து விடுவது திண்ணம். உன் பதினொரு அட்சௌகிணி சேனையும் நிர்மூலமாகி சஞ்சயன் ஆகியோரைத் தவிர மற்ற எல்லோருமே மடிந்து விட்டது. உன் கட்சியில் அசுவத்தாமா, கிருபன், கிருதவர்மா மடிந்துவிட்டார்கள். நீ இன்னும் எந்த நம்பிக்கையில் உயிர் வாழ நினைக்கிறாய்?”
“பிதாமகரே, துரியோதனின் முழு வீரத்தையும் பாண்டவர் இன்னும் புரிந்து கொள்ளவில்லை. சூதில் வல்ல கண்ணன் போல் எனக்கும் சூது தெரியும். நான் இந்த ஏரியின் நீரை ஸ்தம்பிக்கச் செய்து அதனடியில் வாழ்ந்தால் பாண்டவரால் என்னைக் கண்டுபிடிக்க முடியாது. சிறிதுகாலம் ஓய்வெடுத்துக் கொண்டபின் வேற்று நாடுகளுக்குச் சென்று படை திரட்டிக் கொண்டு மறுபடியும் போரிட வருவேன் நான். இறுதியில் வெற்றி எனக்குத்தான்!”
“இல்லையில்லை குருராஜனே! நான் படைத்து வரும் காவியத்தில் உன் முடிவை அசாதாரண வேதனை நிறைந்த ஒரு மகத்தான நிகழ்ச்சியாகச் சித்திரித்திருக்கிறேன் நான். உன் உயிர் பிரியும்போது வானவர் உன் மேல் மலர்மாரி பொழிவர். உன் கதையைப் படிப்பவர்களின் கண்களில் நீர் பெருகும்.”
“அப்படியானால் நான் உங்கள் கைப்பாவையா?… இல்லை… பார்க்கப் போனால் நீங்கள்தான் என்னைக் கண்டு பயப்படுகிறீர்கள், அதனால்தான் நீங்கள் ஒருபோதும் என் முன் வந்த தில்லை…. ஒரே ஒருமுறை நீங்கள் என் முன் வரவிருந்தீர்கள். ஆனால் கடைசி நேரத்தில் நழுவி விட்டீர்கள்….”
சுவடிகளைச் சுருட்டி எடுத்துக் கொண்டு எழுந்தார் வியாசர். “எனக்கு நேரமாகி விட்டது. உனக்கும் அந்திம காலம் நெருங்கி விட்டது. உன் கேள்விக்குச் சுருக்கமாக விடையளிக்கிறேன். உன் அகம்பாவம் காரணமாக பாரதத்தில் ஒரு மாபெரும் போர் நிகழ வேண்டும்; அதை நான் ஒரு மாபெருங்காவியமாக வடிக்க வேண்டும்-இந்த இலட்சியத்துடன் தான் நான் உங்கள் வாழ்க்கையை இந்த முடிவை நோக்கி இயக்கி வந்தேன்… எவ்வளவு பிரும்மாண்டமான, பிரளயத்துக்கொப்பான யுத்தம் நிகழ்ந்தது பார்த்தாயா, துரியோதனா!…. உலகில் க்ஷத்திரிய குலமே அநேகமாகப் பூண்டற்றுப் போய்விட்டது….!”
“ஆகா! இத்தகைய முடிவு குறித்து எவ்வளவு ஆனந்தம் உங்களுக்கு? நீங்களும் பரசுராமர் போன்றவரா?”
“சீ, சீ… அத்தகைய நோக்கம் எதுவுமில்லை எனக்கு. மனிதனின் ஆயுளை நிர்ணயிப்பது காலம்தான். நீ, யுதிஷ்டிரன், பார்த்தன், கர்ணன் எல்லோருமே காலகதியின் நியதிக்குட்பட்டவர்கள்தாம். காவியகர்த்தா என்ற முறையில் நிகழ்ச்சிகளை மாத்திரம் என் இஷ்டப்படி அமைத்திருக்கிறேன் ….அவ்வளவுதான் உம், நான் திரௌபதிக்கு இம்மாதிரி திருமணத்தை அமைக்காதிருந்தால்….!”
“ஆமாம், நீங்கள் ஏன் இந்த விஷயத்தில் இவ்வளவு உற்சாகம் காட்டினீர்கள்? ஒரு பெண்ணுக்கு ஐந்து கணவர்கள்! வேத விதிகளுக்கு மாறான இந்த ஏற்பாட்டை நீங்கள் பலவந்தமாகப் பாண்டவர்கள் மேல் திணித்தீர்களே, ஏன்?”
“உனக்கு இதெல்லாம் புரியாது. நான் திரௌபதிக்கு ஐந்து கணவர்களை அளித்த கணம் முதல் அவள் பாரதத்தின் சரித்திரத்திலேயே ஓர் ஒப்பற்ற இடத்தைப் பெற்றுவிட்டாள். ஆனால் சூதாட்டத்தில் தோல்வி நேர்ந்தபின் ராஜசபையில் தன் ஐந்து கணவர்கள் முன்னிலையில் சீறியெழுந்தாளே அதுபோன்ற நிகழ்ச்சி வேறெங்காவது, எப்போதாவது நடந்திருக்கிறதா?
“சூதாட்டத்தில் பஞ்ச பாண்டவர்கள் உன் அடிமை களானார்கள். அவர்கள் விடுதலை பெறக் காரணம் அந்தப் பெண்மணிதான். பெண்மையின் ஜ்வாலை அவள். அவளது ஒவ்வொரு சொல்லும் நெருப்பு ஜ்வாலை. அவளுடன் ஒப்பிட்டால் மற்ற பெண்கள் வெறும் குரங்குகள், அத்தகைய அசாதாரணமான பாத்திரம் ஒரே ஒருவனுக்கு உடைமையாக இருக்க முடியுமா? யாரோ வரும் அரவம் கேட்கிறது; பாண்ட வர்கள்தாம் உன்னைத் தேடி வருகிறார்களோ என்னவோ….?”
தன் கதையை எடுத்துச் சுழற்றினான் துரியோதனன். “உம், உங்கள் காவியத்தின் தேவைக்காக எங்கள் வாழ்க்கையில் விளையாடினீர்களா? உங்கள் விளையாட்டின் பலனை இப்போது அனுபவியுங்கள்….! இதோ இந்தக் கதையால் உங்கள் மண்டையைப் பிளந்து விடப் போகிறேன் நான்! என் எஞ்சிய வாழ்க்கையை உங்கள் தலையீடின்றி என் இஷ்டப்படி வாழப்போகிறேன்!”
வியாசர் தம் கைகளிரண்டையும் தூக்கிக்கொண்டு கூவினார், “மூடா! நான் சிரஞ்சீவி என்பது உனக்குத் தெரியாதா? நீ ஆயிரம் கதைகள் கொண்டு தாக்கினாலும் நான் இறக்கமாட்டேன். அசுவத்தாமா, மகாபலி, அனுமாள், விபீஷணன், இவர்களைப்
போல் நானும் அழிவற்றவன்.”
“ஆமாம், மறந்துவிட்டேன்…. நீங்கள் சிரஞ்சீவி…. அப்படியானால் உங்களிஷ்டப்படிதான் நான் சாகவேண்டுமா?”
பரிவுடன் கூறினார் வியாசர், “குழந்தாய், எவ்விதத் தயக்கமுமின்றி இந்த வாழ்க்கை நாடகத்தில் உள் பாத்திரத்தை நடித்துவிட்டுப் போ…. ஒன்று மட்டும் நினைவு வைத்துக்கொள்… நான் உனக்கு அநீதி இழைக்கவில்லை. வெகுவிரைவில் நீ சுவர்க்க இன்பத்தைச் சுவைப்பாய். யுத்தத்தில் வெற்றி பெற்ற பாண்டவரே மயானமாகிவிட்ட பூமியை ஆளும் பெயரில் நாளும் பச்சாதாபத்தில் வெந்து தவிப்பார்கள்.
“அவர்களது பெருமை கொஞ்சங் கொஞ்சமாகக் குன்றிப் போகும். அவர்கள் நோயாலும் மூப்பாலும் வலுவிழந்த உடல்களுடன் வாழ்க்கைச் சுமையைச் சுமக்கும் போது நீ ஆனந்தமாக சுவர்க்க சுகத்தில் திளைத்துக் கொண்டிருப்பாய். இங்கு பாண்டவரின் உற்றார் உறவினர் யாரும் இல்லை. நீயோ உன் உறவினரும் நண்பரும் புடைசூழச் சுவர்க்கத்தில் வீற்றிருப்பாய்… உயிர் மீது பாசத்தைவிட்டு மரணத்தை எதிர்கொள், போ….”
“அப்படியே ஆகட்டும்…. ஆனால் நீங்கள் எப்போதும் இந்த உலகத்திலேயே கிடந்து உழல வேண்டியதுதான்! பேராசைக்காரப் பிராமணரே, நீர் அழிவற்றவர். ஆதலால் சுவர்க்கம் உமக்கில்லை.”
சிரித்துக் கொண்டு சொன்னார் வியாசர், “நான் சுவர்க்கத்துக்கு ஏங்கவில்லை துரியோதனா! யுகத்துக்கு யுகம், தலைமுறைக்குத் தலைமுறை மனிதர்களை நான் படைத்துள்ள இந்தக் காவியம் எப்படி ஆள்கிறது என்பதைப் பார்த்துக் கொண்டு எப்போதும் பூமியிலேயே வாழ்ந்திருக்கத்தான் எனக்கு ஆசை, பேராசை. வேறெந்தக் கவிக்கு இத்தகைய பேறு கிடைத்திருக்கிறது, சொல்!” வீர சொர்க்கத்தை எதிர்நோக்கித் துரியோதனன் யுத்த பூமிக்கு நடந்தான்.
மூலம் : சுசிஸ்மிதா பந்த்யோபாத்தியாய்/அதே உருவம் – விருட்சம் நாளிதழ்

மொழிபெயர்ப்பு சரியில்லையா தட்டச்சு சரியில்லையா என்று தெரியவில்லை. , நிறைய வார்த்தைகள் அரைகுறையாக நிற்கின்றன் சில வார்த்தைகள் முன்னும் பின்னுமாய் இருக்கின்றன.
மகாபாரதத்தை இதிகாசம் என்பார்கள் இதிகாசம் என்றால் இது நடந்தது என்று பொருள் என்று சொல்வார்கள் ்நடந்ததை தான் வியாசர் எழுதினார் என்று அர்த்தத்தில் வரும். இவர் என்னமோ இவர் எழுதுவது போல் தான் அது நடந்தது என்பது போன்ற கற்பனை என்னை பொறுத்தவரை அவ்வளவு பொருந்தவில்லை.