
14.11. 2025 இணையக் கவியரங்கில் வாசித்த மூன்றாவது கவிதை
பறக்கும் நட்சத்திரம்
சிறகை விரித்து பூமியை நோக்க
வெற்றிடத்தில் ஒரு பறவை
புதிய நட்சத்திரமாகிவிடும்
ஆனால் சிறகை விரித்த
இதயப் பறவையோ
அசைவற்று கிடக்கிறது
அவ்விடத்தில் யுகம் யுகமாக
வானத்திற்கும் பூமிக்கும்
பயணம் செய்யும் மேகங்களோடு
தொடருகின்றது கோடி கோடி
ஜீவன்களின் பிறவிப் பயணம்
எண்ணற்ற பிறப்புகளின் வழியே அடைவது ஒன்றும் இல்லை
இது ஒரு அலகிலா விளையாட்டு என்பதைத் தவிர
