
பூவின் மணம்
முகர்தலின் திறம்
இரண்டும் இணைந்தால்
மலருக்குக் கொண்டாட்டம்!
உணவின் ருசி
நாவின் சுவை
இரண்டும் சேர்ந்தால்
பசிக்குக் கொண்டாட்டம்!
பாடலின் இனிமை
கேட்கும் தனிமை
இரண்டும் வாய்த்தால்
ரசனைக்குக் கொண்டாட்டம்!
உன்மேல் எனக்கும்
என்மேல் உனக்கும்
ஈர்ப்பிருக்கும் வரை
வாழ்க்கைக்கே கொண்டாட்டம்!
கொண்டாட்டம்…!
