
சாயந்திர டீக்கடை அரட்டை அது.
எழுத்தாள ஓவிய இசை நண்பர்களின் குரூப்.
ஒருமணி நேரம் அதுவாக ஓடும்.
“தப்புதான்னு இவர் சொன்னார்”
“கண்டிப்பா நீ சொன்னாலும் அப்படிதான்”
“நியூஸ்ல கூட தப்புன்னாங்க”
“உங்க கருத்தை வச்சு கதை எழுதணும்”
“உங்க கதை படிச்சுட்டு அதுக்கு கவிதை எழுதுவேன்”
“எல்லோரும் சொல்றோம்… ஓவியரே நீங்க”
“நான் உங்களை வரைஞ்சுட்டு இருக்கேன்”
“அட… காட்டுங்க. சூப்பர், நல்லாருக்கு”
“ஏன் முகம் முழுசா போடலை?”
“உங்களுக்கு தனிப்பட்ட முகம் கூட இருக்கா?”
சொல்லிவிட்டு எழுந்து கிளம்பினார் ஓவியர்.
