
காலை எழுந்தவுடன் முன்பு
சேர்ந்து வேலை செய்தவர்க்கும்
பள்ளியில் சேர்ந்து
நூலை ப்படித்தவர்க்கும்
நாள்தோறும் கூட இருந்து
நாளை கழிப்பவர்க்கும்
காலை வணக்கம் சொல்ல வேண்டும் இது எனது
வெகுநாட்ப்பழக்கம்.
வேலைப்பளுவாலே சில
நாள் அதனை மறந்தால்
கேள்விகள் பல வரும் உடல்
ஊறு எதுவும் இல்லையே என்று
பேறு என்ன
செய்தேன் இப்படி
நண்பர் உறவினரை நான் பெற நான் இன்று.
