
எல்லாச் சொற்களும் சட்டென்று காணாமல் போய்விடுகின்றன
எல்லா கற்பனையும்
திடீரென்று முரண்டு பிடிக்கின்றன
எல்லா நினைவுகளும்
எங்கோ ஒளிந்து கொள்கின்றன.
எப்போதாவது நிகழ்வதுதான் இது
ஒவ்வொருமுறையும்
இனி நிகழக்கூடாது என்று நினைப்பேன்
ஆனால் நிகழ்ந்துவிடும்.
நிகழ்வதை யாரேனும் தடுக்கமுடியுமா.?
அப்படி தடுக்க முடிந்தால் அவர்கள் பலசாலிகள்
பாக்கியவான்கள்.
என்னால் எப்போதும் முடியவதில்லை.
நிற்க
இந்த ஒளிந்துகொள்ளும் நினைவுகள்
காணாமல் போகும் சொற்கள்
முரண்டு பிடிக்கும் கற்பனை இவையெல்லாம் என்ன செய்கிறதென்று
தெரியுமா உங்களுக்கு.?
ஒரு கவிதையை என்னிடம் நெருங்கவிடாமல் கவனமாக பார்த்துக் கொள்வதுதான்
அப்படியும் வந்துவிடும் கவிதைக்கு
அன்பின் முத்தங்கள்
.
தாராபுரம்
